/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேலிசெய்தவர் குத்தி கொலை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
கேலிசெய்தவர் குத்தி கொலை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
கேலிசெய்தவர் குத்தி கொலை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
கேலிசெய்தவர் குத்தி கொலை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 05, 2025 02:57 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி அருகே தன்னை கேலி செய்த வேன் டிரைவர் மணிகண்டனை 27, கத்தியால் குத்தி கொலை செய்த கூலித் தொழிலாளி முத்துராஜுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகே ஆத்துார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 27, வேன் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் 38, கூலி தொழிலாளி. 2023 மார்ச் 5 காலை மணிகண்டன் மீன் வியாபாரம் செய்யும்போது அங்கு வந்த முத்துராஜை பார்த்து, அவரது கை குறித்து கேலி செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்று இரவு முத்துராஜ் கத்தியால் குத்தியதில் மணிகண்டன் உயிர் இழந்தார். மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முத்துராஜுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.