ADDED : ஜூலை 11, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'மூன்று மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களில் மாற்றமில்லை' என, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., அளித்துள்ள விளக்கம்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நிர்ணயிக்கும் பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை பெற்று, பள்ளிகள் பாடங்களை நடத்த வேண்டும். அந்த வகையில் நடப்புக் கல்வி ஆண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
வேறு எந்த வகுப்புக்கும் பாடப் புத்தகங்களில் மாற்றமில்லை. பழைய புத்தகங்களையே தொடர்ந்து பின்பற்றலாம். 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பாடத்திட்டத்தின் அடிப்படையிலான வழிகாட்டுதல் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் அடங்கிய புத்தகங்கள், சி.பி.எஸ்.இ.,யால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.