இன்ஜினியரிங் கவுன்சிலிங் 31,000 பேர் கூடுதல் பதிவு
இன்ஜினியரிங் கவுன்சிலிங் 31,000 பேர் கூடுதல் பதிவு
ADDED : ஜூன் 08, 2024 01:27 AM
சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 2.5 லட்சம் இன்ஜினியரிங் இடங்களை நிரப்ப, தமிழக உயர்கல்வித் துறை சார்பில், ஆன்லைன் வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, மே 6ம் தேதி, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியுடன் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, 2.50 லட்சம் பேர் ஆன்லைன் வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். 2.06 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.78 லட்சம் பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு, 2.29 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்து, 1.55 லட்சம் பேர் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு அதைவிட, 31,000 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டைவிட, 23,000 பேர் அதிகமாக, சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்க தயாராகியுள்ளனர்.
எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மாணவர்களிடையே இன்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால், பல கல்லுாரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையை நிறைவு செய்து விட்டன.