பிரிட்டன் பிரதமர் வெற்றிக்கு தி.மு.க., வின் யோசனை உதவியதா?
பிரிட்டன் பிரதமர் வெற்றிக்கு தி.மு.க., வின் யோசனை உதவியதா?
ADDED : ஜூலை 07, 2024 08:39 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்தி உள்ள, 'முதல்வரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' இடம் பெற்றிருந்ததாகவும், பிரிட்டன் தேர்தலில் அக்கட்சி வெற்றிக்கு இதெல்லாமே முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
பிரிட்டனில் புதிய பிரதமர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியத்தை திமுகவிடம் திருடினாரா? என்பது குறித்து விவாதம் நடந்தது.
இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.