ADDED : ஜூன் 04, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அண்ணா நகரில் முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த மெக்கானிக் முத்துப்பாண்டி வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37. மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு 8:30 மணிக்கு திருத்தங்கல் ரோடு அண்ணாநகரில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
முன் விரோதமா அல்லது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா. டி.எஸ்.பி., சுப்பையா பார்வையிட்டனர்.
முத்துப்பாண்டி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டின் அருகிலேயே கொலை நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.