ADDED : ஜூன் 04, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்திய விமானப்படை பொது நுழைவு தேர்வுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, விமான ஓட்டிகள், விமான ஓட்டிகள் அல்லாத தொழில்நுட்ப பிரிவு, நிர்வாகம் மற்றும் தளவாடங்கள், கணக்கு உள்ளிட்ட பிரிவுகளில் 317 பணியிடங்கள் உள்ளன.
வரும் ஆகஸ்ட் மாதம் 9, 10, 11ம் தேதிகளில் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, வரும் 28 வரை விண்ணப்பிக்கலாம்.
தேசிய மாணவர் படை பிரிவில், 'சி' சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு சிறப்பு நுழைவுகளும் உள்ளன. கூடுதல் தகவல்களை, careerindianairforce.cdac.in அல்லது afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.