ADDED : மே 12, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : “பாகிஸ்தானுக்கு எதிரான போரை, வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி,” என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நடிகர் ரஜினி நடிக்கும் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் பங்கேற்க கேரளா செல்வதற்காக, நேற்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுக்கள். இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி.
இவ்வாறு ரஜினி கூறினார்.

