ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்
ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்
ADDED : மே 19, 2025 01:27 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலத்துக்கு செல்லும் இணைப்புச்சாலை, இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் உள்வாங்கியது. பாலம் திறப்பு விழாவுக்கு முன்னதாகவே, சாலை உள் வாங்கியது ஊர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் அருகே, கெடிலம் ஆற்றின் குறுக்கே, ஆளூர் - மொகலார் இடையே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில், பாலத்துக்கு செல்லும் இணைப்புச்சாலை, மண் இறங்கி உள் வாங்கியது. மேம்பாலம் கட்டுமானப்பணி தரமின்றி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சீரமைப்பு செய்த பிறகே பாலத்தை திறக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.