ADDED : செப் 19, 2025 02:09 AM
சென்னை:'புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமை களிலும், பஞ்சவடி ஷேத்தி ரத்தில் மஹா சிறப்பு அன்ன தானம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன' என, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்ட ராமன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் 29 கி.மீட்டரில் அமைந்துள்ள பஞ்சவடி ஷேத்திரத்தில், வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ வாரி வேங்கடாஜலபதி, விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ச நேய சுவாமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
இங்குள்ள ஸ்ரீவாரி வேங் கடாஜலபதி சுவாமிக்கு, 'ஸ்வர்ணபுஷ்ப ஸங்கல்ப பூஜை மற்றும் விசேஷ சிறப்பு அர்ச்சனைகள்' அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் நடக்கும்.
அந்நாட்களில் அறுசுவை களுடன் கூடிய அன்னதானம் காலை 11:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை நடக்கும். அனைத்து நிகழ்ச்சிகளும், 'பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்' வாயிலாக நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.