sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

/

கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்


UPDATED : மே 17, 2025 12:22 PM

ADDED : மே 17, 2025 09:55 AM

Google News

UPDATED : மே 17, 2025 12:22 PM ADDED : மே 17, 2025 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறையில் நடந்த கோடிக்கணக்கான வருவாய் இழப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு இரு மாவட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

இம்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து ஜல்லி, எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர் ஆலைகளுக்கு கற்களை எடுத்துச் செல்ல கனிமவளத்துறையினர் அனுமதி நடைச்சீட்டு வழங்குகின்றனர். எத்தனை நடை சீட்டு வழங்கப்படுகிறதோ அதற்கு இணையான அளவு ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்றவை வெளியிடங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும்.

ஆனால் திருநெல்வேலியில் சுமார் 100 நடை சீட்டு கற்கள் கொண்டு செல்ல அனுமதி பெற்ற குவாரிகளுக்கு 100 ஜல்லி மற்றும் எம் சாண்ட் கொண்டு செல்லவே அனுமதி தரப்படும். ஆனால் 100 நடைச்சீட்டுக்கு பதில் 500 அனுமதி பாஸ் பெற்றுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு குவாரிகளின் முறைகேடுகளுக்கும் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அவருடன் உடன் பணியாற்றும் அதிகாரிகள், தட்டச்சர், டிரைவர் வரை கூட்டாக செயல்பட்டு கோடிக்கணக்கில் சுருட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வரை புகார்கள் சென்றன.

தமிழக இயற்கை வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் உத்தரவின்படி கனிமவள மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் இரு நாட்களாக கனிமவளத்துறையில் ஆய்வு மேற்கொண்டார்.

நடை சீட்டுக்கும்,ஜல்லி, எம் சாண்ட் கொண்டு சென்றதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தது தெரிந்தது. ரூ. பல கோடி அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உதவி இயக்குனர் ஏ.பாலமுருகன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். உதவி புவியியலாளர் எஸ்.சேகர், உதவியாளர் சொர்ணலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இளநிலை உதவியாளர் காசிராஜன், தட்டச்சர் ஈஸ்வரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். அலுவலக கார் டிரைவர் ரமேஷ் சென்னை கிண்டி புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு மாற்றப்பட்டார். இத்துறையில் கூடுதலாக பணிபுரியும் ஒரு துணை தாசில்தார், இரு வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai