ADDED : ஜூன் 15, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் வரும், 22ல் ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
இது பற்றி, ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எத்தனை 'சீட்'டுகளை பெறுவது என்பது குறித்து, மா.கம்யூ., - வி.சி.க., போன்ற கட்சிகளைப்போல், பொதுக்குழுவில் ம.தி.மு.க., தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், ம.தி.மு.க.வுக்கு, சீட் ஒதுக்க கோருவோம்.
தற்போதே, கோரிக்கை வைத்தால்தான், ராஜ்யசபா தேர்தல் போல, ஏமாற்றம் ஏற்படாது. வேறு கூட்டணியில் சேருவதற்கு ம.தி.மு.க., பேசுவதாக தகவல்கள் பரவுவதால், மத்திய அரசுக்கு எதிராகவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

