அடுத்த கட்டம் என்ன?: அண்ணாமலை தலைமையில் பா.ஜ., மையக் குழு கூட்டம்
அடுத்த கட்டம் என்ன?: அண்ணாமலை தலைமையில் பா.ஜ., மையக் குழு கூட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:33 PM

சென்னை: தமிழக பா.ஜ.,வின் அடுத்த கட்டம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது.
லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு பாமக உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ., தேர்தலை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தாலும், பா.ஜ., ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிமுக.,வுடன் கூட்டணி தேவையில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் துணிச்சலான முடிவால், பா.ஜ., வளர்ச்சி அடைந்துள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில், இன்று (ஜூன் 19) கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள், தோல்விக்கான காரணங்கள், கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.