இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 25 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 25 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 19, 2025 06:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசா: காசாவில் நெட்சரிம் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் காயமடைந்ததாகவும் காசா ராணுவ அதிகாரி கூறினார்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி முகமது அல்-முகயிர் கூறியதாவது:
இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவுப்பொருட்களை வாங்க கூடுவர். இந்நிலையில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடக்கும் தாக்குதல் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
காயமடைந்தவர்கள், வடக்கு மற்றும் மத்திய காசாவில் உள்ள அல்-அவ்தா மற்றும் அல்-அக்ஸா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு முகமது அல்-முகயிர் கூறினார்.