ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.,வில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.,வில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
ADDED : ஜூலை 12, 2024 05:39 PM

ஐக்கிய நாடுகள்: உக்ரைனில் நடத்தப்படும் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக்கூறி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்,ஐபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என தலைப்பில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஐபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து ராணுவம் மற்றும் அங்கீகரிக்கப்படாத ஊழியர்களை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை உக்ரைன் கொண்டு வந்தது.
193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா., சபையில் இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிராக 9 ஓட்டுகளும் கிடைத்தன. ரஷ்யா, வட கொரியா, பெலாரஸ், கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிராக ஓட்டளித்தன. இந்தியா, வங்கதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, பூடான், நேபாளம், தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் புறக்கணித்தன.