முகேஷ் அம்பானி மகன் திருமணம் கோலாகலம்: குவிந்த பிரபலங்கள்
முகேஷ் அம்பானி மகன் திருமணம் கோலாகலம்: குவிந்த பிரபலங்கள்
UPDATED : ஜூலை 12, 2024 10:24 PM
ADDED : ஜூலை 12, 2024 07:14 PM

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் 3வது மகன் ஆனந்த், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.
மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12-ம் தேதி ) திருமண விழா கோலாகலமாக நடந்தது.
இதில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஜினி உற்சாக நடனம்
அம்பானி இல்லத்திருமண விழாவில் நடிகர் ரஜினி உற்சாகமாக நடனம் ஆடினார்.உடன் பாலிவுட் நடிகர் அணில்கபூரும் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.