Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ நாவில் எச்சில் ஊற வைக்கும் 'அப்பள குழம்பு'

நாவில் எச்சில் ஊற வைக்கும் 'அப்பள குழம்பு'

நாவில் எச்சில் ஊற வைக்கும் 'அப்பள குழம்பு'


ADDED : பிப் 22, 2025 05:27 AM

Follow on Google

ADDED : பிப் 22, 2025 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழக்கமாக அப்பளத்தை, சாதம், பாயசத்துடன் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால், காய்கறிகள் இல்லாமல், அப்பளத்தில் குழம்பு தயாரித்து, அதையே உணவில் சமைத்து சாப்பிட்டுள்ளீர்களா. இல்லை எனில், இந்த 'ரெசிப்பி'யை உங்கள் வீட்டில் இன்று 'டிரை' பண்ணி பாருங்கள்.

செய்முறை:


 முதலில் கடாயில் 25 மி.லி., நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், 5 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு போடவும்.

 கடுகு வெடித்தவுடன் கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

 சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி போடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 அடுத்ததாக கால் ஸ்பூன் மஞ்சள் துாள், ஒரு டீஸ்பூன் பெருங்காய துாள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் சாம்பார் துாள், அரை ஸ்பூன் மிளகாய் துாளுடன் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

 இரண்டு கொதி வந்த பின், எலுமிச்சை சைஸ் புளியை 200 மி.லி., தண்ணீரில் கரைக்கவும். அதை வாணலியில் ஊற்றி வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள்.

 சுவையை அதிகரிக்க ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து, மீண்டும் 250 மி.லி., தண்ணீர் ஊற்றுங்கள்.

 எட்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க வேண்டும். அடுத்ததாக பொறித்த அப்பளங்களை இரண்டாக உடைத்து குழம்பில் போட்டு, இரண்டு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள்.

 இறுதியாக ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தனியாக வறுத்து மிக்ஸியில் அரைத்து, குழம்பில் போட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். ஒரு மணி நேரம் அப்பளம் ஊற வேண்டும். அதன்பின் சாப்பிடலாம். அலாதி சுவையுடன் இருக்கும்

. - நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap