தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ அறுசுவை அறிவிப்பு கட்டுரை --- வீட்டிலேயே முந்திரி, பாதாமில் ஐஸ்கிரீம் செய்யலாம்

 அறுசுவை அறிவிப்பு கட்டுரை --- வீட்டிலேயே முந்திரி, பாதாமில் ஐஸ்கிரீம் செய்யலாம்

 அறுசுவை அறிவிப்பு கட்டுரை --- வீட்டிலேயே முந்திரி, பாதாமில் ஐஸ்கிரீம் செய்யலாம்


ADDED : ஏப் 11, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில், சாக்லேட்டுக்கு அடுத்தபடியாக ஐஸ்கிரீம் இருக்கும். அது, குளிர் காலம், மழை காலமாக இருந்தாலும், ஐஸ்கிரீம் தான் அவர்களுக்கு விருப்பமானது. வீட்டிலேயே அதிக நேரம் கெடாமல் இருக்கும் வகையில் ஐஸ்கிரீம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

* பாதாம் - 1 கப்

* முந்திரி - 1 கப்

* மக்கானா - 1 கப்

* தேங்காய் பால் - 1 கப்

* பேரீட்சம் பழம் - அரை கப்

* கோகோ பவுடர் - அரை கப்

செய்முறை

* ஒரு பெரிய பவுலில் ஒரு கப் பாதாம், ஒரு கப் முந்திரி, ஒரு கப் மக்கானா எடுத்து கொள்ள வேண்டும்.

* இதனுடன் ஒரு கப் தேங்காய் பால், அரை கப் பேரீட்சம்பழம், அரை கப் கோ கோ பவுடரை கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஒருவேளை உங்களுக்கு கொஞ்சம் இனிப்பு சுவை அதிகம் வேண்டும் என்றால், சிறிதளவு நாட்டு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக இந்த கலவையை ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி 4 மணி நேரத்திற்கு மேல் பிரீட்ஜில் வைத்து எடுத்து வைக்கவும்.

* பின் ஐஸ்கிரீம் மோல்டை வெளியில் எடுத்தால் போதும். சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த பாதம் மற்றும் முந்திரி ஐஸ்கிரீம் ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us