sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

நொறுக்குகள்

/

நொறுக்குகள்

நொறுக்குகள்

நொறுக்குகள்


ADDED : செப் 13, 2025 04:44 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

♨ வாழைக்காய் வறுவல் செய்யும்போது மசாலாவில் சிறிதளவு சிக்கன் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும்.

♨ வாழைப்பூ துவையல் செய்யும்போது நெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

♨ பிரியாணி செய்யும்போது வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டியது அவசியம்.

♨ பொரியல் செய்யும்போது காரப் பொடிக்கு பதிலாக தேங்காய் பொடி சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும்.

♨ ஊறுகாய் செய்யும்போது கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஊறுகாய் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

♨ காளான் வறுவல் செய்யும்போது மிளகுத்துாள் சேர்த்து செய்தால் சுவை கூடும்.

♨ பொரியலுக்கு தேங்காய் துருவல் போடுவதற்கு பதிலாக வறுத்த வேர்க்கடலையை அரைத்து சேர்க்கலாம்.

♨ மீனை வறுக்கும் முன் சிறிது மஞ்சள் துாள், உப்பு தடவி 10 நிமிஷம் வைத்தால் எண்ணெய் குறைவாக சிதறும்.

♨ சப்பாத்தி சூடாக இருக்க சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.

♨ உருளைக்கிழங்கு குருமா செய்யும்போது பட்டை, சோம்பு, கிராம்பு அனைத்தையும் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

♨ தோசை மாவு புளித்து விட்டால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் சேர்த்து பணியாரமாக செய்தும் சாப்பிடலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us