வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது பூண்டு, இஞ்சியோடு சேர்த்து பச்சை மிளகாய், மல்லி, புதினாவையும் விழுதாக அரைத்து சேர்த்தால் சுவை அதிகமாகும்.
பொறியல் மீந்துவிட்டால், அதில் இரண்டு முட்டைகளை சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.
தயிரில் இஞ்சி தோலை சீவி, தட்டி போட்டால் தயிர் விரைவில் புளித்து போகாது.
இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க, அதன்மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
பருப்புரசம் தாளிக்கும் போது ஒரு கொத்து முருங்கைக் கீரையையும் சேர்த்து தாளித்தால் ரசத்தின் சுவை கூடும்.
துவையல் அரைக்கும் போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு கலந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
காய்கறி பொறியல் செய்யும் போது, அதிகமாக தண்ணீர் கலக்க வேண்டாம். மாறாக, சிறிதளவு கலந்தாலே போதும்.
வெங்காய பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயம், இஞ்சி சேர்த்து அரைத்து மாவில் கலந்து பக்கோடா செய்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.
வெஜிடபிள் கட்லெட்டில் சிறிது தேங்காய் விழுதை சேர்த்து கொண்டால், சுவை மேலும் அதிகரிக்கும்.
புளிக்குழம்பு செய்யும் போது கடைசியில் மிளகு, சீரகம் பொடியை போட்டால் வாசமும், சுவையும் அதிகரிக்கும்.
பீன்ஸ், கேரட் பொறியல் செய்யும் போது, வறுத்த வேர்க்கடலையை துண்டுகளாக்கி சேர்த்து சமைத்தால் சுவை கூடும்.
கேக் செய்யும் போது, தேன் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
- நமது நிருபர் -