Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/கேரள ஸ்டைல் சின்ன முள்ளன் மீன் குழம்பு

கேரள ஸ்டைல் சின்ன முள்ளன் மீன் குழம்பு

கேரள ஸ்டைல் சின்ன முள்ளன் மீன் குழம்பு


ADDED : பிப் 07, 2026 06:29 AM

Follow on Google

ADDED : பிப் 07, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த வாரம் கேரள ஸ்டைலில் சின்ன முள்ளன் மீன் குழம்பு செய்து, உங்கள் வீட்டினரை அசத்திவிடலாம்.

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

சின்ன முள்ளன் மீன் -

அரை கிலோ

புளி - எலுமிச்சை பழம் அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் துாள் - 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 6

தேங்காய் துருவல் -

அரை கப்

சீரகம் - அரை ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -

6 ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் முள்ளன் மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். புளியை வெந்நீரில் ஊற வைக்கவும். புளியை கரைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதை மீன் சட்டியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில், 2 ஸ்பூன் மிளகாய் துாள், உப்பு, மஞ்சள் துாள் சேர்க்கவும்.

தேங்காய், வெங்காயம், சிறிது சீரகம் சேர்த்து, அரைத்து வைத்து கொள்ளவும்.

பின், 2 பச்சை மிளகாய் சேர்க்கவும். குழம்பை நன்றாக கொதிக்கவிடவும். சுத்தம் செய்த முள்ளன் மீன்களை குழம்பில் சேர்க்கவும்.

விரைவில் குழம்பில் மீன் வெந்து விடும். பின்னர், வேறு பாத்திரத்தில் 6 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும்.

ஒரு கொதி கொதித்து, எண்ணெய் மேலே பளபளவென்று வரும் போது, கேசை ஆப் பண்ணவும். அவ்வளவு தான் சின்ன முள்ளன் மீன் குழம்பு தயார்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap