sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்

/

உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்

உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்

உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகளுக்கு காலை நேர உணவாக பிரெட் ஜாம், பிரெட் ரோஸ்ட், பிரெட் ஆம்லேட், பிரெட் பட்டர் என பல உணவுகள் செய்து தருகிறோம். அதுபோன்று உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில், கோதுமை மாவில் சுவையான, ஆரோக்கம் நிறைந்த பூசணிக்காய் பிரெட் செய்யலாம்.

செய்முறை  மஞ்சள் பூசணிக்காயை வேக வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 பின், ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து வைத்துள்ள சர்க்கரையை நன்றாக அரைத்து, பவுடராக்கிக் கொள்ளவும்.

 ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் கலவை, பவுடராக்கிய சர்க்கரை, ஒன்றரை கப் அளவிற்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 இந்த கலவையுடன் சலித்து வைத்துள்ள கோதுமை மாவு ஒன்றரை கப், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கவும்.

 இதனுடன் பாதாம் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் சிறிதளவு வினிகர் கலக்கவும்.

 இறுதியாக இந்த கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஒன்றரை மணி நேரம் குக்கரில் வைத்து பேக்கிங் செய்து எடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியமான பூசணிக்காய் பிரெட் ரெடி.

- நமது நிருபர் -




    • Dinamalar Events


    Dinamalar