தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா

 சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா

 சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா


ADDED : ஜன 24, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பத்து நிமிடங்களில் ஆரோக்கியமான சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வாவை ரெடி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

l சர்க்கரை வள்ளி கிழங்கு - 1

l நெய் - சிறிதளவு

l நாட்டு சர்க்கரை - ஒரு கப்

l ஏலக்காய் துாள் - சிறிதளவு

l பாதாம், வால்நட், முந்திரி - சிறிதளவு

செய்முறை

l முதலில் பெரிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக சுத்தம் செய்த பின், அதன் தோலை நீக்கிவிடுங்கள்.

l பின்னர் கேரட் துருவுவது போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கை நைசாக துருவி கொள்ளுங்கள்.

l ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி வால்நட், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

l பிறகு வாணலியில் நெய் ஊற்றி, துருவி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடங்கள் மூடி போட்டு மூடி வையுங்கள்.

l உங்களின் சுவைக்கு ஏற்றவாறு நாட்டு சர்க்கரையை சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து நன்கு கிளறவும்.

l ஐந்து நிமிடங்களுக்கு பின், ஏலக்காய் துாள் சேர்த்து கொள்ளுங்கள்.

l நிறைவில் வறுத்து வைத்துள்ள வால்நட், முந்திரி,பாதாம் போன்றவற்றை சேர்த்து இறக்கினால் போதும். ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வால்நட் அல்வா தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us