sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே

/

சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே

சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே

சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே


ADDED : ஜூன் 22, 2025 05:42 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் பெங்களூரில் வேலை செய்கின்றனர்.

இங்கு வேலை செய்வோர், தங்கள் மாநில உணவுகளை தவற விடுவது வழக்கம். நமக்கு பிடித்த நமது ஊர் உணவு எளிதில் கிடைப்பது இல்லையே என்ற கவலை வேண்டாம். 'மா கா துலார்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உங்கள் கவலைகளை போக்குகிறது.

அம்மா கை வண்ணம்


இந்நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் மிட்டல், 32 கூறியதாவது:

எனது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார். கடந்த 2008 ம் ஆண்டு பட்டப்படிப்புக்காக பெங்களூரு வந்தேன். சிறு வயதில் இருந்தே நான் தீவிர உணவு பிரியர். பெங்களூருக்கு வந்த பின், தென்மாநில உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டேன். ஆனாலும் வடமாநிலங்களில் கிடைக்கும் காரமான உணவு வகைகளை சாப்பிட முடியவில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது. இதனால் பல உணவகங்களில் இருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டேன். எதுவும் எனக்கு திருப்தியாக இல்லை.

பட்டப்படிப்பு படித்த பின், 'அசெஞ்ஜர்' ஐ.டி., நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீட்டில் அம்மா கை வண்ணத்தில் சமைக்கும் உணவு கிடைக்காமல் எத்தனையோ பேர் ஏக்கத்தில் இருப்பர். கடந்த 2015 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

உத்தர பிரதேச உணவு வகைகளை சமைத்து தர முடியுமா என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். ஆரம்பத்தில் அந்த பெண் சமைத்த உணவுகளை விரும்பி சாப்பிட்டேன். என் அம்மாவின் சமையல் கை வண்ணம் அந்த பெண்ணிடம் அப்படியே இருந்தது. அவர் சமைத்த உணவுகளை, எனது நண்பர்களுக்கும் எடுத்து சென்றேன்; ருசித்து சாப்பிட்டனர். நாளைக்கும் எடுத்து வர முடியுமா என்று கேட்டனர்.

ஆன்லைன் ஆர்டர்


அங்கு இருந்து தான் உணவு தொடர்பான எனது பயணம் துவங்கியது. ஐ.டி., நிறுவனத்தில் நான் பார்த்த வேலையை விட்டுவிட்டு 'மா கா துலார்' எனும் அம்மாக்களின் பராமரிப்பு என்ற பெயரில் சிறிதாக நிறுவனத்தை துவக்கினேன். பல மாநிலங்களை சேர்ந்த பெண்களை வேலைக்கு சேர்த்து, அவர்கள் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளை தயாரித்தோம். சொந்த மாநில உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், எங்கள் நிறுவனத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

கடந்த 2020 ல் கொரோனா காலகட்டத்தில் உணவு ஆர்டர்கள் அதிகமாக இருந்தன. தற்போது எனது நிறுவனம் பெங்களூரு, உத்தர பிரதேசத்தில் மட்டும் உள்ளது. ஆன்லைன் ஆர்டர் செய்தால், வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்கிறோம்.

வடமாநில ஸ்பெஷல் இனிப்புகளும், எங்களிடம் கிடைக்கிறது. நன்றாக சமையல் செய்யும் இல்லத்தரசிகள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும் என்பதும் எனது விருப்பம். இப்போது எனது நிறுவனத்தில் பல மாநிலங்களை சேர்ந்த 100 பெண்கள் சமையல் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு மொபைல் எண்: 86183 30924

காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஆர்டர் செய்யலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us