ADDED : ஜூன் 29, 2025 12:38 AM

பெண்களின் கண்கள் பேச வேண்டும். அப்படி பேசாத கண்களையும் தரமான காஜலும், சரியான மஸ்காராவும் பேச வைத்து விடும்.ஆனால் கண்களுக்கு இயற்கையான அழகை வழங்கும் காஜல், சில சமயங்களில் போட்ட சிறிது நேரத்திலேயே, கண்களின் ஓரங்களில் வழிந்து, மொத்த அழகையும் கெடுத்து விடலாம்.இதை தவிர்க்க, 'ஸ்மட்ஜ்- புரூப், 'எக்ஸ்ட்ரீம் ஐஸ்' வகை காஜல்களை தேர்வு செய்யலாம். 9 மணி நேரத்திற்கு மேலாக, கண்களின் அழகை பாதுகாப்பதாக அடித்து சொல்கிறார்கள், அழகு கலை நிபுணர்கள்.
மஸ்காரா மேஜிக்
கண்களுக்கு கூடுதல் வால்யூம் சேர்க்க, மஸ்காரா மிக முக்கியம். இமைகளை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்றி, கண்களுக்கு ஒரு 'இம்பிரஸிவ் லுக்' தரும். இதற்கு, 'வாட்டர் புரூப் மஸ்காரா' பயன்படுத்தி, கொண்டாடுகிறார்கள் காலேஜ் கேர்ள்ஸ்.ஆனால், இதில் பலர் கவனிக்க தவறுவது, மஸ்காரா பிரஷ் தேர்வு. ஸ்டிரைட் பிரஷ், கர்வ் பிரஷ், பால் டிப் பிரஷ், கோன் ஷேப் பிரஷ், மைக்ரோ பிரஷ், பிளாஸ்டிக் பிரஷ் போன்ற பல வகைகள் உள்ளன.
கண்களின் வடிவம், விருப்பமான ஸ்டைல் ஆகியவற்றை பொறுத்து, மஸ்காரா பிரஷ் தேர்ந்தெடுத்தால், அப்புறம் நீங்களும் நடிகை பிரியா வாரியர்தான்!