/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
உயர் ரக கார் வாங்குவது என் சிறு வயது கனவு
/
உயர் ரக கார் வாங்குவது என் சிறு வயது கனவு
ADDED : ஜூன் 29, 2025 12:37 AM

கார் என்பது வசதிக்கானது, ஆடம்பரமானது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், பத்திரமான பயணத்துக்கானது என்பதை, நடிகரும், மாதம்பட்டி குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவன சேர்மனுமான மாதம்பட்டி ரங்கராஜ் பயன்படுத்தும் காரை பார்த்தபோது, புரிந்து கொள்ள முடிந்தது. இவர் ஜெர்மனி தயாரிப்பான, 'போர்ஷே மக்கான்' என்ற காரை பயன்படுத்துகிறார்.
''சின்ன வயதிலிருந்தே கார் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏன் என்றால் எங்கள் ஊரில் மணியகாரர் கோபாலகிருஷ்ணன், எந்த புதிய கார் வந்தாலும் வாங்கி விடுவார்.
அந்த கார்களை, நான் பள்ளிக்கு செல்லும் போதும், விளையாடும் போதும் பார்ப்பதுண்டு. அப்போது என் மனதில் தோன்றிய, ஆசை கலந்த லட்சியம்தான் இப்போது இது போன்ற உயர்ரக கார்களை வாங்க துாண்டியுள்ளது,''
''இந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி?''
''நீண்ட பயணத்தின்போது நம்மை பாதுகாக்க தகுதியான, கார்கள் வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு விலை உயர்ந்த காரில் செல்லும்போது, ஒரு விபத்து ஏற்பட்டது. சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பினேன்,''
''இது போன்ற பாதுகாப்பு அம்சத்துக்காகவே, ஜெர்மனி தயாரிப்பான, இந்த 'போர்ஷே மக்கான்' காரை வாங்கினோம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையலாம். ஸ்டியரிங்கை, ஓட்டுபவருக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.
காருக்கு உள்ளேயும், வெளியேயும் நமது வசதிக்கு ஏற்ப, அனைத்து வசதிகளையும் செய்து கொள்ளலாம்,''
''ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோபார்க்கிங், வளைவுகளுக்கேற்ப தானே திரும்பும் வசதி, ஏர்குவாலிட்டி கன்ட்ரோலர், க்ரூஷ் கன்ட்ரோல் வசதி... இப்படி ஏராளமான வசதிகள் உள்ளன. கார் முழுக்க 'சென்சார்' உள்ளது. எவ்வளவு கி.மீ.,பயணித்தாலும் களைப்பு ஏற்படாது,''.