/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
முகத்தின் அழகு உதட்டில் தெரியும்!
/
முகத்தின் அழகு உதட்டில் தெரியும்!
ADDED : ஜூன் 22, 2025 02:05 AM

பெண்கள் தங்களது முகப் பொலிவை அதிகரிக்க, தேர்வு செய்யும் அழகு சாதனங்களில், லிப்ஸ்டிக் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
எலைட் லுக் விரும்புபவர்களுக்கு, லிக்விட் லிப்ஸ்டிக் தான் பெஸ்ட், இது நீண்ட நேரம் இருக்கக்கூடியது.
கிரெயான் லிப்ஸ்டிக், உதடுகளில் மென்மையான மின்னும் நிறம் தரும். சாட்டின் மற்றும் கிரீம் வகை லிப்ஸ்டிக், உதடுகள் உலர்வதிலிருந்து காப்பாற்றும். இயற்கையான தோற்றம் தரும். 90ஸ் பேஷன் போல, 'ஹை- ஷைன்' மற்றும் 'கிளியர் க்ளாஸ்' லிப்ஸ்டிக்குகளும் பலரின் பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது.
பாஸ்பரஸ், சல்பேட்ஸ் இல்லாத, இயற்கை எண்ணெய்கள் மற்றும் இதர மூலிகைகளுடன் தயாரிக்கப்படும் ஆர்கானிக் லிப்ஸ்டிக்குகள், இன்று பல பெண்களின் பேவரைட்.
தேர்வில் இருக்கு சீக்ரெட்!
“உதட்டின் இயற்கை நிறத்தைப் பொறுத்து, லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய வேண்டும். முதலில் லிப் பாம் போட்டுவிட்டு, அதை மெதுவாக துடைத்த பின், லிப்ஸ்டிக் போட்டால் ஈரப்பதம் நீடிக்கும். உங்கள் முகத்தில் ஒரு மென்மையான ஓவியம் போல, லிப்ஸ்டிக் உங்கள் ஸ்டைலுக்கு இருக்க, லிப் லைனர் பயன்படுத்தினால் லிப்ஸ்டிக் மேலும் அழகாக தெரியும்,”
-- -- ஐஸ்வர்யா அழகு கலை நிபுணர்