/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஒழுக்கம் + நேரம் தவறாமை + மரியாதை = ஜப்பான்
/
ஒழுக்கம் + நேரம் தவறாமை + மரியாதை = ஜப்பான்
ADDED : ஜூன் 22, 2025 01:28 AM

குடும்பத்துடன் ஜப்பானில், டோக்கியோ, கியோட்டோ நகரங்களுக்கு போயிருந்தோம். அவர்களின் ஒழுக்கமும், நேர்த்தியும் வியப்பைத் தருகின்றன. லிப்ட், பஸ் ஸ்டாப் என எங்கு நின்றாலும் வரிசையை பேணுகின்றனர்.
மிகப்பெரிய சாலை கிராசிங்கில், சுமார் 20 வரிசைகளில் எதிரெதிரே 300க்கும் மேற்பட்டோர் நின்றாலும், 30 -- 40 நொடிகளில், வைத்திருக்கும் குடை கூட இடித்துவிடாமல், விரைவாக கடந்து விடுகின்றனர். அவர்கள் தரும் மரியாதை பிரமிக்க வைக்கிறது. வழி கேட்டால், மிகப் பணிவாக பதில் கூறுகின்றனர்.
ரயில் நிலையங்களுக்கு எண்களில் பெயர் சூட்டியுள்ளனர். இதனால், மொழிப் பிரச்னை இல்லை.
ஜப்பானியர்களின் நேரம் தவறாமையை நேரில் பார்த்து வியந்தோம். ரயில்கள் துல்லியமான நேரத்துக்கு வருகின்றன.
360 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயிலில், சின்ன குலுங்கல் கூட இல்லை. எவ்வளவு மைல்கள் பயணித்தாலும், நிமிடம் கூட தாமதிப்பதில்லை.
ஜப்பான் கரன்சியான யென் மதிப்பு சற்று குறைவு என்பதால், நிறைய ஷாப்பிங் செய்யலாம். மிகத் தரமான பொருட்கள். குறைவான விலை.
அவர்களின் ஒழுக்கம், நேரம் தவறாமையைப் பார்ப்பதற்காக மட்டுமல்லாமல், ஷாப்பிங் செய்யவும் ஜப்பான் நல்ல சுற்றுலா தலம்.
---- கார்த்திகேயன், ஆடிட்டர்.