- நமது நிருபர் -
பொரியல், வறுவல் காரம் அதிகமாகிவிட்டால் ரஸ்க்கை துாள் செய்து துாவினால் காரம் குறையும்.
மீந்து போன சப்பாத்தியை, மிக்சியில் போட்டு அரைத்து சுவையான உப்புமா செய்யலாம்.�� சாம்பார் செய்யும் போது, துவரம்பருப்புடன், வெந்தயம் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
பக்கோடா செய்யும் போது கடலைமாவுக்கு பதிலாக பொட்டுக்கடலை மாவை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
பாலை காய்ச்சி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பாலாடை அதிகம் கிடைக்கும்.
எந்த வகை சட்னி அரைத்தாலும், சிறிதளவு பூண்டு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பாதாம் பருப்பை, சுடு தண்ணீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதாக நீக்கலாம்.
பால் பாயசம் செய்யும் போது, பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
புளிக்குழம்பு செய்யும் போது இறுதியில் மிளகு, சீரகத்தை அரைத்து பொடியாக போட்டால் சுவை அதிகரிக்கும்.
கோழி, ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும்போது, அதனுடன் சிறிது எலுமிச்சம் சாற்றை சேர்த்தால், சுவையும், மணமும் கூடும்.
எலுமிச்சை பழ சர்பத் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சாற்றை கலந்தால், சுவையும், மணமும் கூடும்