/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
வெயிலுக்கு 'ஜில்லு'ன்னு 'மாங்கோ மஸ்தானி'
/
வெயிலுக்கு 'ஜில்லு'ன்னு 'மாங்கோ மஸ்தானி'
ADDED : மே 16, 2025 10:03 PM

-கோடைக்காலம் துவங்கியதில் இருந்து ஜில்லுன்னு ஏதாவது குடிக்கணுமுன்னு ஆசையா இருக்கும். இந்த சமயத்தில் பலரும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பன்னாட்டு குளிர்பானங்களையே குடிக்கின்றனர். இது தற்சமயத்திற்கு புத்துணர்ச்சியை தந்தாலும், தாகத்தை தீர்த்தாலும் பிற்காலத்தில் பக்க விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
இது போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்துவிட்டு, பழச்சாறுகளை குடிக்கலாம். இந்த பழச்சாற்றிலும், சற்று வித்தியாசமாக 'மாங்கோ மஸ்தானி' செய்து பருகலாம். இதை செய்வது மிக எளிது.
அதே சமயம் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகுவர். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா.
செய்முறை
முதலில் அரை க்ரீம் பாலை நன்றாக காய்ச்சி, அதை குளிர்சாதன பெட்டியில் ஐந்து மணி நேரம் வைக்க வேண்டும். இதன்பின், மாம்பழத்தின் தோலை நீக்கி, அதை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை மிக்சியில் போட்டு, அதனுடன் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட பால், சர்க்கரை, வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
தண்ணீராகவும் இல்லாமல், ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமாக அரைத்து கொள்ளவும்.
இதை, ஒரு பெரிய கண்ணாடி குடுவையில் ஊற்றவும். இதன் மேல், சிறிதளவு வெண்ணிலா ஐஸ்கிரீம், மாம்பழ துண்டுகள், நறுக்கி வைத்த ட்ரை நட்ஸ் ஐ போட வேண்டும். அதில் அழகுக்காக ஒரு சிவப்பு கலர் செர்ரி பழத்தையும் சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான், சுவையான சூப்பரான மாங்கோ மஸ்தானி தயார்.
இதை மதிய நேரங்களில் வீட்டில் செய்து, அனைவரும் பருகலாம்
. - நமது நிருபர்