Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : மே 31, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உண்மைகளை உரக்க சொ ல்லுங்கள் உதயநிதி

'மக்களிடம் செல், மக்களோ டு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள் எனச்சொன்ன தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரையின் வழியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட வேண்டும்' என விரும்பும் தமிழக மக்கள் அவர்முன் வைக்கும் சில கேள்விகள்...

1. த.வெ.க.,விற்கு ம க்கள் ஓட்டு போட்டதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி நிர்வாகம் மீதான சலிப்பை தாண்டி, 'தாய் - பொம்மை' ஒப்பீடு போல் அல்லாது நாங்கள் ஏற்கும்படியான ஒரு காரணத்தை எப் போது சொல்வீர்கள்?

2. 'செய்திகளில் வரும் குற்றங்கள் மட்டுமே இவ்வளவு' என த.வெ.க., ஆட்சி பற்றி திகிலுாட்டும் முன்னாள் துணை முதல்வரே... இப்படியும் நிகழுமெனில், உங்களது ஆட்சியில் 'செய்திகளில் வராத குற்றங்கள்' பட்டியல் எங்கே?

3. 'காங் கிரஸ் வெற்றிக்கு காரணம் கழக உடன்பிறப்புகள்தான்' எனும் தி.மு.க., இளைஞரணி தீர்மானம், 'காங்கிரஸ் ஓட்டுகள் இன்றி தி.மு.க., வென்ற தொகுதிகள் எத்தனை' என எழுப்பியிருக்கும் கேள்விக்கு தங்களது பதில் எ ன்ன?

4. குறைகளைச் சொல்கையில் எல்லாம் தவறாது 'தி.மு.க.,' என உச்சரித்து, குறைகளுக்கும் தி.மு.க.,வுக்கும் முடிச்சு போட்டு ஆட்சியை வென்றவர் முதல்வர் விஜய்; உங்கள் தலைவர் 'த.வெ.க.,' என 'இன்னும்' உச்சரிக்காதது சரியா?

5. 'குடும்பத்தின் தகப்பனை மட்டுமல்லாது தாயையும் 'டாஸ்மாக்' விழுங்குகிறது' என்பது கோவை சூலுார் சிறுமி சம்பவத்தில் ஊர்ஜிதமாகி விட்டது; சொல்லுங்கள்... இந்த சீரழிவுக்கு நேற்று முளைத்த த.வெ.க.,தான் காரணமா?

6. 'வேட்பாளர் யாரென அறிந்து இந்த தேர்தலில் ஓட்டு பதிவாகவில்லை' என்கின்றன சில ஓலங்கள்; 'கொளத்துார்' தொகுதியை மனதில் வைத்து சொல்லுங்கள்... 'வேட்பாளர்கள் யார்' என அறியாமலா மக்கள் ஓட்டு போட்டனர்?

7. பதவி பெற்றவர் பயணித்த பாதை ' தவறான பாதை' எனில், 'அதே பாதையில் பயணித்து நாமும் வெல்வோம்' என்று தன் கட்சி கட்டமைப்பை மாற்ற முனைவது, மக்கள் நலன் மீதான அக்கறையா... பதவி மோகத்தின் சாட்சியா?

7 ½ 'ரீல்ஸ் மாடல்' - முன்னோடி யார்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap