/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பூச்சு வேலையை துவங்கும் முன் கட்டுமான பாகங்களை தயார்படுத்துவது எப்படி?
/
பூச்சு வேலையை துவங்கும் முன் கட்டுமான பாகங்களை தயார்படுத்துவது எப்படி?
பூச்சு வேலையை துவங்கும் முன் கட்டுமான பாகங்களை தயார்படுத்துவது எப்படி?
பூச்சு வேலையை துவங்கும் முன் கட்டுமான பாகங்களை தயார்படுத்துவது எப்படி?
ADDED : செப் 13, 2025 07:29 AM

பொ துவாக வீடு கட்டும் போது அதில் அடிப்படை கான்கிரீட் பணிகளில் தான் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதில், துாண்கள், மேல் தளம்போன்ற பாகங்கள் முறையாக அமைந்தால் போதும் என்று பலரும் நினைப்பதால், பூச்சு வேலை போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்ககாமல் போகிறது.
ஒரு கட்டடம் கட்டுவது என்றால், அதில் துாண்கள் அமைப்பது, சுவர்கள் அமைப்பது போன்ற பணிகள் தான் முக்கியம் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் கட்டு வேலைக்கு அப்பால், பூச்சு வேலைக்கு போதிய முக்கியத் து வம் கிடைப்பதில்லை.
துாண்கள், சுவர் கட்டு வேலையை முறையாக முடித்தால் போதும் என்றும், அவசர கதியில் பூச்சு வேலையை மேற்கொள்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் பெரும்பாலான சமயங்களில் துாண்கள், பீம்கள் போன்ற வற்றுக்கான கட்டுமான பணிகள் முடிந்தால் போதும் என்று மக்கள் இருக்கின்றனர்.
இதனால், துாண்கள், பீம்களை இணைக்கும் சுவர்கள் கட்டும் வேலை முடிந்த பின் உரிய கால அவகாசம் கொடுக்காமல் பூச்சு வேலையை துவக்குகின்றனர். சுவர்கள் கட்டும் பணிகள் முடிந்த பின் அதில்முறையாக நீராற்ற கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
சுவர்களுக்கான நீராற்றும் பணிகள் முடிந்த நிலையில் அதில் மேற்பரப்பில் ஈரப்பதம் முழுமையாக காய வேண்டும். சுவர்கள் உறுதியாவதற்கு அதில் ஈரம் ஒரு கட்டத்தில் அவசிய தேவையாக இருக்கலாம். ஆனால், பூச்சு வேலைக்கு முன் அதில் ஈரம் துளியும் இருக்க கூடாது.
குறிப்பாக, சுவர்கள், துாண்கள், பீம்கள் இணையும் இடங்களில் முறையான ஒட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். கட்டு வேலை முடிந்து நீராற்றும் பணிகள் முடிந்து நன்கு உலர்ந்த நிலை என்பது சுவரின் உட்புறத்தில் ஈரம் இல்லா நிலை ஏற்பட வேண்டும்.
அதே நேரம் பூச்சு வேலை துவங்கும் போது உலர்ந்த சுவரில் கலவையை ஒட்டவைக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது சிறிதளவு தண்ணீர் தெளித்து மேலோட்டமாக ஈரப்படுத்திய பின் பூச்சு வேலையை துவங்கலாம்.
கட்டடங்களில் பூச்சு வேலையை துவக்கும் போது சுவர்களுக்கு ஒரு மாதிரியும், துாண்கள், பீம்களுக்கு ஒரு மாதிரியும் அணுகுமுறையில் மாற்றம் தேவை. கட்டு மானத்தின் மேல் மேற்கொள்ளப்படும் பூச்சின் கனம் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.