
மீனவர் குப்பத்தில் தாய் சுகந்தியோடு வாழ்க்கை; மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதனையாளராகி தற்போது மாமல்லபுரத்தின் அடையாளமாகி நிற்கிறார்!
* யார் இவர்?
பெயர்: கமலி
வகுப்பு: 10ம் வகுப்பு
பள்ளி: செயின்ட் மேரிஸ்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமல்லபுரம், செங்கல்பட்டு.
அடையாளம்: ஸ்கேட்டிங்
மற்றும் அலைச்சறுக்கு வீராங்கனை
இந்த ஆர்வம் எதனால் கமலி?
மாமல்லபுரம் கடற்கரை தள்ளுவண்டி கடையில அம்மாவுக்கு உதவியா நிற்குறப்போ, 'நமக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி அதையே குடும்ப கவுரவமா மாத்தணும்'னு ஒரு சிந்தனை ஓடிட்டே இருக்கும். அந்த கனவோட செயல் வடிவம்தான் இது!
டிசம்பர், 2023 - சண்டிகர் தேசிய 'ஸ்கேட்டிங்' போட்டியில் இரண்டு வெண்கலம்; தற்போதுவரை அலைச்சறுக்கு போட்டிகளில் பத்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்கள் குவித்திருக்கிறார் கமலி.
பெருமிதம் தரும் அங்கீகாரம்?
என் கதையில நான் நடிச்சு வெளிநாட்டவர் இயக்கிய 'கமலி' ஆவணப்படத்துக்கு 2019ம் ஆண்டு மும்பை மற்றும் அட்லாண்டா சர்வதேச திரைப்பட விழாக்கள்ல விருதுகள் கிடைச்சதுல எனக்கு பெருமகிழ்ச்சி.
எங்கள் கமலி
ஓவியம், கோகோ, ஓட்டம், பேட்மின்டன்னு தொட்டது அனைத்திலும் துலங்கும் கமலி, ஆசிய போட்டிகளிலும் ஒலிம்பிக்கிலும் நிச்சயம் சாதிப்பாள்!
- ர. சஹாய பிருந்தா, தலைமை ஆசிரியை.