
சென்னை, அயனாவரத்தில் இயங்குகிறது கீதாலஷ்மி வரதராஜன் நிர்வகிக்கும் ஸ்ரீ சக்தி ஜூட் பேக்ஸ். சணல் பைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இவருக்கு 23 ஆண்டு அனுபவம்!
நான்கு தையல் இயந்திரங்களோடு இத்தொழிலை துவக்கியவர், தற்போது 25 ஊழியர்கள், 30 தையல் இயந்திரங்களோடு அன்றாடம் 3,000க்கும் மேற்பட்ட சணல் பைகளை உருவாக்கி வருகிறார்.
தொழில் சந்தித்திருக்கும் மாற்றங்கள் என்னென்ன?
நாங்க தொழில் துவக்கின காலத்துல 14x15, 13x13 சதுர அங்குல அடர்த்தியில சணல் துணிகள் கிடைச்சது; இப்போ, 12x12, 10x10, ஆக்ஸ்போர்டு, சணல் - பருத்தி கலந்த வயலான்னு சணல் துணிகள் கிடைக்குது. இதனால பைகளோட தரம் கூடியிருக்கு!
கோல்கட்டா இறக்குமதி சணல் துணிகளை மூலப்பொருளாகவும் விற்பனை பண்றோம்! சொந்த தயாரிப்புனால எங்க பைகளோட விலை குறைவு. 'லேப்டாப்' பைகள், 'தண்ணீர் குடுவை' பைகள், 'பைல்' பைகளை பலவித அளவுகள்ல தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்கள் விரும்புற வகையில 12x10 முதல் 20x17 அங்குல அளவிலான பைகளையும் தயார் பண்ணித் தர்றோம்.
'மக்கள் பயன்படுத்துற 10 பைகள்ல ஆறு பைகள் எங்க தயாரிப்பா இருக்கணும்'ங்கிறது என் கனவு.
சிறப்பு பொருள்: 'ஸ்கிரீன் பிரிண்டிங்' கொண்டிருக்கும் சணல் பைகள் - ரூ.60 முதல்
வாய்ஸ் பபுள்: நெகிழி ஒழிக்கும் சணல்!
63810 67678