PUBLISHED ON : ஜூன் 29, 2025

மலச்சிக்கல் என்பது முதியோர் பலருக்கு பெரும் சிக்கலாகவே இருக்கிறது. இதற்கு பி.எஸ்.ஜி., மருத்துவமனை தலைமை உணவியல் ஆலோசகர் கவிதா தீர்வு சொல்கிறார்.
முதுமையில் மலச்சிக்கல் ஏற்பட, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, சரியான நேரத்திற்கு உணவு எடுக்காதது, காய்கறி, பழங்கள் தவிர்ப்பது, உடற்பயிற்சி இல்லாதது, பிற நோய்களுக்கு மருந்துகள் எடுப்பது முக்கிய காரணங்கள்.
வயது அதிகமாகும் போது பலர் பல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பல் சிக்கலால் மென்று தின்பதில் சிரமம் இருக்கும். காய்கறி, கீரைகள், பழங்களை முற்றிலும் தவிர்த்து ரசம் சாதம், சாம்பார் சாதம் என எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால், நார்ச்சத்து கிடைப்பதில்லை. பல் பிரச்னை இருந்தால், காய்கறி, கீரைகளை வேகவைத்து மசித்து உணவுடன் கலந்து சாப்பிடுங்கள், அல்லது சட்டினியாக செய்து சாப்பிடலாம்.
பருப்புடன் காய்கறி கூட்டாக செய்து கொள்ளலாம். இல்லை எனில், அரைத்து, சாப்பிடும் தோசை மாவு, சப்பாத்தி மாவுடன் கலந்தும் சாப்பிடலாம். எக்காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது.
தண்ணீர் நாள் ஒன்றுக்கு, 1.5 -2 லிட்டர் கட்டாயம் குடிக்க வேண்டும். ஒரு சில நோய்களுக்கு அதிக தண்ணீர் எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி நோய் பாதிப்பு இருப்பின், டாக்டர் அறிவுரை பெற்று தண்ணீர் அளவை நிர்ணயிக்கலாம்.
மைதா, அதிக இனிப்புகள், துரித மற்றும் பொறித்த உணவுகள், புரோட்டா, நுாடுல்ஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பருப்பு, பயறுவகைகளை உடைக்காமல் முழுமையாக சாப்பிட வேண்டும்.
குறிப்பாக, நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடிந்த வரை, 7-8 மணிக்குள் இரவு முடித்துவிடவேண்டும். பப்பாளி, சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றை உண்ண வேண்டும்.
இறுதியாக, எளிமையான உடற்பயிற்சிகள் செய்து, உடல் இயக்கத்தை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை சரியாக பின்பற்றினால், மலச்சிக்கல் பிரச்னை தவிர்க்கலாம்.
முதுமையில் மலச்சிக்கல் ஏற்பட, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, சரியான நேரத்திற்கு உணவு எடுக்காதது, காய்கறி, பழங்கள் தவிர்ப்பது, உடற்பயிற்சி இல்லாதது, பிற நோய்களுக்கு மருந்துகள் எடுப்பது முக்கிய காரணங்கள்.
காய்கறி, கீரைகளை வேகவைத்து மசித்து உணவுடன் கலந்து சாப்பிடுங்கள், அல்லது சட்டினியாக செய்து சாப்பிடலாம். பருப்புடன் காய்கறி கூட்டாக செய்து கொள்ளலாம். இல்லை எனில், அரைத்து, சாப்பிடும் தோசை மாவு, சப்பாத்தி மாவுடன் கலந்தும் சாப்பிடலாம்.