
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. முழுமையான பசுமை துறைமுகக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் துறைமுகமாக, எந்தத் துறைமுகம் மாறியுள்ளது?
அ. சென்னை
ஆ. தூத்துக்குடி
இ. கொச்சின்
ஈ. மும்பை
2. இந்தியாவின் எந்த மாநிலம், வரும் கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக் பாடம் கற்றுத் தருவதன் மூலம், ரோபோட்டிக் கல்வியைக் கட்டாயமாக்கிய முதல் மாநிலமாகச் சாதனைப் படைக்கிறது?
அ. தெலங்கானா
ஆ. கர்நாடகம்
இ. கேரளம்
ஈ. மகாராஷ்டிரம்
3. கடந்த நிதியாண்டில், இந்தியாவின் எந்தப் பொருளின் ஏற்றுமதி, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்கள் ஏற்றுமதியை விடவும் அதிகமாக இருந்ததாக, தரவுகள் தெரிவிக்கின்றன?
அ. ஸ்மார்ட்போன்
ஆ. கார்
இ. லேப்டாப்
ஈ. ஏசி
4. இந்தியாவில், முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக, எந்த மாநிலம் திகழ்கிறது?
அ. தமிழகம்
ஆ. கேரளம்
இ. மிசோரம்
ஈ. குஜராத்
5. இலக்கிய உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும், சர்வதேச புக்கர் பரிசுக்கு இவ்வாண்டு தேர்வாகியுள்ள முதல் கன்னட எழுத்தாளர்?
அ. லதா பிரியா
ஆ. சுப்ரியா
இ. கவிமாலா
ஈ. பானு முஷ்டாக்
6. வயோதிகம் காரணமாகச் சமீபத்தில் காலமான, மூத்த அணு விஞ்ஞானியான, இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர்?
அ. ஆர்.எம்.கிருஷ்ணன்
ஆ. எம்.ஆர்.சீனிவாசன்
இ. எஸ்.ஆர்.வேலாயுதம்
ஈ. ஏ.வெங்கடேசன்
7. கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்ற, குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் வழக்கறிஞராக செயல்பட்டிருக்க வேண்டும் என்ற நடைமுறையை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது?
அ. ஒன்று
ஆ. இரண்டு
இ. மூன்று
ஈ. நான்கு
8. ருமேனியாவில் நடந்த கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்?
அ. குகேஷ்
ஆ. வைஷாலி
இ. அர்ஜுன் எரிகேசி
ஈ. பிரக்யானந்தா
விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. ஆ, 7. இ, 8. ஈ.