sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: பொருத்துங்கள்

திறன் உலா: பொருத்துங்கள்

திறன் உலா: பொருத்துங்கள்


PUBLISHED ON : ஜூன் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் வலைத்தளப் பக்கங்களை அணுகும் போது, அந்தப் பக்கங்கள் சரியாக 'லோட்' ஆகாமல் (Loading) சில பிழைகளைக் காட்டும். ஒவ்வொரு பிழையும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டிருக்கும். இவை HTTP பிழைக் குறியீடுகள் (Error Codes) என அழைக்கப்படுகின்றன. இந்தப் பிழைகள் 4xx (கிளையன்ட் பிழைகள்) மற்றும் 5xx (சேவையக பிழைகள்) எனப் பிரிக்கப்படுகின்றன. கீழே சில பிழைக் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பிழைக் குறியீடுகளைச் சரியான காரணங்களுடன் பொருத்துங்கள்.

1. 403 Error - அ. ஒரு சேவையகம் மற்றொரு சேவையகத்திடமிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பதில் பெறாமல் போவது (Gateway Timeout).

2. 404 Error - ஆ. பயனர் குறுகிய நேரத்தில் அதிகமான கோரிக்கைகளை அனுப்பியதால் தடுக்கப்பட்டது (Too Many Requests).

3. 429 Error - இ. பயனர் தொடர்பு கொள்ள நினைக்கும் சேவையகம் தற்காலிகமாகக் கிடைக்காமல் போவது (Service Unavailable)

4. 503 Error - ஈ. பயனருக்கு அந்த ஆதாரத்தை அணுக அனுமதி இல்லை (Forbidden).

5. 504 Error - உ. பயனர் கேட்ட வலைத்தளப் பக்கம் அல்லது ஆதாரம் சேவையகத்தில் இல்லை (Page Not Found).

விடைகள்:

1. ஈ

2. உ

3. ஆ

4. இ

5. அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us