/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
மோட்டார் விளையாட்டு 'ட்ரேக் ரேஸிங்' அருப்புக்கோட்டை பெண்ணின் அற்புத சாதனை
/
மோட்டார் விளையாட்டு 'ட்ரேக் ரேஸிங்' அருப்புக்கோட்டை பெண்ணின் அற்புத சாதனை
மோட்டார் விளையாட்டு 'ட்ரேக் ரேஸிங்' அருப்புக்கோட்டை பெண்ணின் அற்புத சாதனை
மோட்டார் விளையாட்டு 'ட்ரேக் ரேஸிங்' அருப்புக்கோட்டை பெண்ணின் அற்புத சாதனை
ADDED : ஜூன் 22, 2025 03:40 AM

கார் ரேஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது நடிகர் அஜித்குமார். அதே துறையில் பலர் சாதித்து வருகின்றனர். 'சர்க்கியூட்', 'ரேலி', 'ட்ரேக்' என பலவகை ரேஸ்கள் உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த யுவஸ்ரீ, 'ட்ரேக் ரேஸிங்'கில் 10.6 வினாடி கடந்து சாதித்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் 'ட்ரேக் ரேஸிங்' கார் பயணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. எனது கணவர் சொந்தமாக கார் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். காரை கட்டமைப்பு செய்வது, அவற்றில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது, குறிப்பாக 'ட்ரேக் ரேஸிங்'கிற்கு ஏற்றாற் போல் மாற்றுவது போன்றவை செய்வார்.
நடிகர் அஜித்குமார் செய்வது 'சர்க்கியூட் ரேஸ்'. அது மிக நீளமானது. அதிக நேரம் கொண்டது. ஆனால் 'ட்ரேக் ரேஸ்' என்பது 'குவார்ட்டர் மைலை' எவ்வளவு வினாடிக்குள் வேகமாக கடக்கிறோம் என்பது தான். பொதுவாக இது ரஷ்யா, அமெரிக்காவில் பிரபலம். இந்தியாவில் டில்லி, மும்பை பகுதியில் நடக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பேருக்கு 'ட்ரேக் ரேஸிங்' பற்றி தெரியாது.
ஆனால் காரை வேகமாக ஓட்ட பிடிக்கும் என்பதால் ரேஸில் ஈடுபட ஆசை. அப்போது 'ட்ரேக் ரேஸிங்' செய்ய பலர் அறிவுறுத்தினர். எப்படி காரை செலுத்தி, 'குவார்ட்டர் மைலை' (400 மீட்டர்) அடைகிறீர்கள் என்பது தான் விஷயம். இறுதியில் ப்ரேக் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் தகுதி நீக்கம் ஆக்கப்படுவீர் என்றனர்.
இந்த மோட்டார் விளையாட்டுக்கு வந்த பின் தான் தெரிந்தது இதில் பெண்களே மிகக்குறைவாக உள்ளனர் என்று. இது ஆண்கள் அதிகம் இருக்கும் விளையாட்டு. சில ரேஸ்களில் 150 ஆண்களில் நான் ஒரு பெண் மட்டுமே இருப்பேன்.
4 ஆண்டுகள் முன் போலோ கார் ரேஸ் செய்து ௨வது இடம் பிடித்தேன். ஒரு பெண் எப்படி போலோ வகை ரேஸில் வெற்றி பெற்றார் என கவனம் பெற்றேன்.
பின் முழுநேரமாக 'ட்ரேக் ரேஸ்' செய்தேன். 16.1 வினாடியில் 400 மீட்டரை கடந்த தான், 10.6 வினாடி கடந்து புதிய சாதனை படைத்தேன். 10.6 வினாடியில் யாரும் ட்ரேக் ரேஸிங் செய்ததில்லை. 2 ஆண்டுகளுக்கு முன் ஆக்டேவியா காரில் 1.8 டி.எஸ்.ஐ., இன்ஜினில் 11.9 வினாடியில் அடைந்ததும், அதுவும் பெண் வெற்றி கண்டதும் பலரை வாயை பிளக்க செய்தது.
நான் இந்தியன் ஓபன் போட்டிகளில் முதலிடம் பெறுவதால், என்னை சூப்பர் கார் ரேஸ் போட்டியில் சேர்த்து விட்டனர். அதிலும் வென்று 3ம் இடம் பிடித்தேன். லேம்போகினி உள்ளிட்ட சூப்பர் கார்கள் மத்தியில் என் காரும் நின்றது. பெடரல் மோட்டார் ஸ்போர்ஸ் ஆப் இந்தியா அமைப்பு என்னையும், என் குழுவையும் பாராட்டியது.
'வேக் மாஸ்டர்ஸ் சென்னை' எனும் என் குழு தான் வெற்றிக்கு காரணம். என் கணவர் தான் நடத்துகிறார். ஸ்ரீராம், தயா, நிகில் குழுவில் இருந்து என் காரை நன்றாக வடிவமைத்தனர். இப்போது 10.6 வினாடியில் செய்கிறேன். அடுத்து 9 வினாடியில் ட்ரேக் ரேஸ் செய்ய விரும்புகிறேன்.
'ட்ரேக் ரேஸ்' ஒரு நல்ல மோட்டார் விளையாட்டு. நிறைய தன்னம்பிக்கை கொடுக்கும். நிறைய பொருளாதாரமும் தேவைப்படும் என்றார்.