sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

தொழில்,சேவை இரண்டிலும் முத்திரை பதித்து வரும் அமெரிக்கத் தமிழர்!

/

தொழில்,சேவை இரண்டிலும் முத்திரை பதித்து வரும் அமெரிக்கத் தமிழர்!

தொழில்,சேவை இரண்டிலும் முத்திரை பதித்து வரும் அமெரிக்கத் தமிழர்!

தொழில்,சேவை இரண்டிலும் முத்திரை பதித்து வரும் அமெரிக்கத் தமிழர்!


ஜன 18, 2025

ஜன 18, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கடுமையான உழைப்பு,இறைவன் அருள்,மற்றும் அதிர்ஷ்டம் மூன்றும் கை கொடுப்பதால் தான் நான் வெற்றிகரமாய் செயல்பட முடிகிறது' என்று பெருமைப்படுகிறார் தொழிலதிபர் சாம்குமார்

சாம், அமெரிக்கா டெக்ஸாஸ் மாநிலம் ஆஸ்டினில் பிரபலJOURNEYMAN எனும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் உரிமையாளர். இவர் தன் தொழிலில் மட்டுமில்லை - சமூக சேவையிலும் கூட அழுத்தமாய் முத்திரை பதித்திருக்கிறார்.


சாம்குமாரின் பூர்வீகம் கோவை அருகே குனியமுத்தூர். ஆனால் இரண்டாம் வகுப்பு முதல் படித்தது, வளர்ந்தது எல்லாம் அம்மா வழி தாத்தாவுடன் திருப்பூரில்!

தாத்தா S.A. பொன்னுசாமி அந்தப் பகுதியில் மிகப் பிரபலம்.அவர் SAP கன்ஸ்ட்ரக்ஷன் மூலம் முன்னணி கான்ட்ராக்டர். சினிமா தியேட்டர் உரிமையாளர். முத்து நகரில் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார்.


இவரது மகனும் சாமின் மாமனாருமாய SAP குமரவேல்சாமி IIT யில் படித்து தந்தையின் கட்டுமான தொழிலை செவ்வனே தொடர்ந்தவர்.

பெங்களூர் GPO சிறப்பாக கட்டினதற்கு ராஜீவ் காந்தி நேஷனல் விருதும் கூட அவர் பெற்றிருக்கிறார்.


தாத்தா மற்றும் மாமாவின் தொழில் பக்தி, கடுமையான உழைப்பு, ஈகை அனைத்தையும் பார்த்து, உணர்ந்து வளர்ந்த சாம்குமாரும் அதே திசையில் பயணித்து வருகிறார்.

சாம் திருப்பூரில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1984 - 89 பெங்களூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் B.E. சிவில் படிப்பிலும் சிறந்து விளங்கி முடித்தார்.


படித்து முடித்ததும் MES அரசாங்க ஏஜென்சிக்கு300 AIRMEN BARACKSபில்டிங்குகள் கட்டி தனது திறமைக்கு அங்கு பணிபுரிந்த Garrison எஞ்ஜினியர் மூலம் அங்கீகாரம் பெற்றார். அதுவே அவரை கட்டுமான துறையில் வளர்வதற்கு பெரும் உதவியாய் இருந்தது.

சாமின் கல்வி , உழைப்பு, அனுபவம் எல்லாம் அவரது வெற்றிக்கு அப்போது முதலே உறுதுணையாய் இருந்து வந்திருக்கிறது.


அந்த தாக்கத்தின் அடுத்த கட்டமாக சாம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் சென்று 1992இல் Construction Engineering &Management Program( CEPU ) முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அங்கேயே தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில்'அசிஸ்டென்ட் எஸ்டிமேட்டர்' எனும் சாதாரணப் பொறுப்பில் சேர்ந்து சீனியர் வைஸ் பிரெசிடெண்ட் அளவிற்கு உயர்ந்தார்.அதே நிறுவனத்தில் பார்ட்னராகவும் இணைந்தார் என்பது சிறப்பு தகவல்.

தன்னிடம் படிப்பு, திறமை, அனுபவம், கடுமையான உழைப்பு எல்லாம் இருக்கும்போது சொந்தமாய் நாமே ஏன் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றவே ,2001 ல் JOURNEYMAN எனும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை ஆரம்பித்தார்.


கஷ்டமான பொருளாதார சூழலிலும் கூட அந்த நிறுவனத்தை 2010 வரை தூக்கி நிறுத்தினார். சாமின் தகுதியும் திறனும் அதன் மூலம் உறுதிப்படுத்தப்படவே, அது வரை பிறருக்காக கட்டுமானம் செய்து கொடுத்து வந்தவர் JCI ரெசிடென்சியல் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அதுவரை பிறருக்கு வேண்டி கட்டுமானம் செய்து வந்தவர்கள் அடுத்தக் கட்டமாக இடமும் இவர்களே வாங்கி அபார்ட்மெண்டுகள் கட்ட ஆரம்பித்தனர். அதை இவர்களே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு விட்டு பராமரித்து பின் அவற்றை விற்று விட்டு வேறு அப்பார்ட்மெண்ட் ஆரம்பிப்பார்கள். அப்படி சாம் இதுவரை 9500 அபார்ட்மெண்ட்கள் கட்டியிருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு 300 பேர்களுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.


ஒவ்வொரு ப்ராஜக்ட் முடியும்போது அவர்களுக்கு நேர்மையாய் குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் பிரித்து தந்து விடுவதால் நாணயம், நம்பிக்கையுடன் இவரது நிறுவனம் பலமாக காலூன்றியுள்ளது.

முதலீட்டர்களை மட்டுமின்றி ஊழியர்களுக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பிரித்து அளித்து விடுகிறார். அதுவும் நீண்ட காலம் பணி புரிபவர்களுக்கு ஒவ்வொரு 5, 10, 15, 20, வருடங்களில் ஒரு வருட சம்பளம் போனஸாக கொடுக்கிறார். அமெரிக்காவில் எத்தனை சம்பளம் பெற்றாலும் பெரும்பாலும் எல்லாம் செலவாயிவிடும். இந்த மாதிரி இவர் தரும் போனஸ் ஊழியர்களுக்கு பெரும் சேமிப்பாக இருக்கிறதாம்.


இப்படி தொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தை அவரே வைத்துக் கொள்வதில்லை. அமெரிக்காவில் MORMON என்னும் கிறிஸ்துவ மதத்தில் தனிப் பிரிவு உண்டு. அவர்கள் ஆண்டுதோறும் தங்களுக்கு வரும் லாபத்தில் 10 சதவிகிதம் சர்ச்சுகளுக்கு கொடுத்து, அதன் மூலம் வருமான வரி விலக்கு பெறுகிறார்கள்.

அது சாமிற்கு ஒரு முன்னுதாரணமாய் அமைந்து. இவரும் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவிகதத்தை கோயில்கள், மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் அன்பளிக்கிறார். கடவுள் நமக்குத் தருவதில் கொஞ்சம் ஆன்மீகப் பணிக்கு திருப்பித் தருவது பெருமிதம் என்கிறார். கணிசமான இவரது அன்பளிப்பு செயல்களும் - தொகையும் ஆச்சர்யம் தரவைக்கின்றன.


ஆஸ்டின் ஹிந்து கோயில் அறக்கட்டளைக்கு இவர் 4 வருடங்கள் சேர்மனாக இருந்திருக்கிறார் .அதற்கு அன்பளித்தவர்கள் பட்டியலில் 20 கோடிகள் கொடுத்து முதலிடம் பிடித்திருப்பது இவர்தான். அத்துடன் அந்த கோயில் கட்டுமானத்தையும் லாப நோக்கின்றி செய்து கொடுத்திருக்கிறார்.

அடுத்து சிடார் பார்க் சாய்பாபா கோயிலின் டிரஸ்டியாக அதற்கும், உதவி. அதேப போல தமிழ்நாடு அறக்கட்டளைக்கும் பெருமளவில் உதவி வருகிறார்.


டெக்ஸாஸ் முருகன் கோயிலுக்கு ரூ.12 கோடிக்கும் அதிகம் வழங்கி அதன் ஆக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறார் .

இவரது சேவை ஆன்மீகம் மட்டுமின்றி - கல்விக்கும் செல்கிறது. சாம் ஆஸ்டினுக்கு 1990 இல் படிக்க வந்த போது முதல் செமஸ்டருக்குப் பின் இவரிடம் பணம் இல்லை. அந்த நேரம் இவர் டீச்சிங் அசிஸ்டெண்டாக பணி செய்து சம்பாதித்து மீதி படிப்பை முடித்தாராம். அந்த கஷ்டத்தை மறந்து விடாமல் இப்போதும், பணம் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காக, இவருக்கு அன்று உதவியாக இருந்த புரபசர்கள்டக்கர் &ஹட்சன் பெயருடன் குமார் என்கிற தன்னையும் சேர்த்து ஒரு பெருந்தொகை போட்டு டிரஸ்ட் ஆரம்பித்து உதவி வருகிறார்.


அதேபோல 10 கோடிகள் இட்டு, SAM & HEMA KUMAR ConstructionEngineeringofManagement Project ( CEPM ) மூலமும் சேவை நடந்து வருகிறது.

ஆஸ்டினில் ஆர்க்கிடெக்சர் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஸ்கூல் போன்றவற்றில் இவர் இப்போதும் அதன் ஆலோசனைக் குழுவில் இருந்து வாலண்டியர் சர்வீஸ்ம் செய்கிறார்.


டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில் 1957 முதல் இதுவரை 70,000 என்ஜினியர்கள் படித்து வெளியே வந்திருப்பார்கள். UT CockrellSchool OF ENGINEERING வழங்கும் Distinguished Engineering பட்டப் படிப்பு விருது இதுவரை சுமார் 312பேர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். அதில் சாமும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

கோவிட் சமயம் நம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும்போது 300 குடும்பங்களுக்கு சாம்,தலைக்கு ஆயிரம் டாலர்கள் வீதம் நிவாரணம் அளித்திருக்கிறார். அப்போது ASTIN Resources centre for Homeless ( ARCH ) எனும் அமைப்பு இயங்கி வந்தது. அந்த போர்டில் இவரும் ஒரு மெம்பர். 2015 / 16 வாக்கில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டி இவரது நிறுவனம் அபார்ட்மெண்ட் கட்டிவிற்க முன்வந்தது.


அந்த அமைப்பு மூலம் உதவ வேண்டி, நடுத்தர வருமான மக்களுக்காக வருடத்திற்கு ஒரு ப்ராஜக்ட் என அபார்ட்மெண்ட்கள் கட்டி அவர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கி வந்திருக்கிறார். அந்த வகையில் சுமார் 3500 அபார்ட்மெண்டுகள் கட்டி சலுகை வாடகையில் கொடுத்திருப்பதில் சாமிற்கு பெருமிதம். திருப்தி.

இவரது தொண்டு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவிலும் கூட வியாபித்துள்ளது. தான் வளர்ந்த ஊரை மறக்கக் கூடாது என சாம் திருப்பூர் பகுதி சின்ன சாமியம்மாள் உயர்நிலைப்பள்ளி; செல்வம் துரைசாமி கல்வி வளாகம், மகளிர் நடுநிலைப்பள்ளி; குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி மற்றும் முதியவர்களுக்கு என கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.


இதற்கெல்லாம் சேர்த்து அமெரிக்காவில் சிறப்பாக தொழில் செய்து சம்பாதிக்க முடிகிறது என பெருமைப்படுகிறார் சாம்.

அமெரிக்காவில் கட்டுமான, பத்திரப்பதிவு போன்ற எதிலும் ஊழல் கிடையாதாம். அங்குள்ள சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் தொழிலுக்கு உதவும் வண்ணம் உள்ளது தொழில் செய்ய வசதியாக இருக்கிறது என்கிறார்.


சாமின் இந்த வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் குடும்பத்தினருக்கும் குறிப்பாய் மனைவிக்கும் பெரும் பங்கு இருக்கிறதாம்.

எல்லாவற்றிற்கும் அப்பா R. துரைசாமி மற்றும் அம்மா செல்வம் துரைசாமி அடித்தளம் இட்டுச் சென்றுள்ளார்கள் என்கிறார். இவருக்கு புனிதா, சித்ரா என இரண்டு சகோதரிகளும் உண்டு.


இவரது மனைவி ஹேமா 19 வயதிலேயே திருமணம் என்பதால் அந்த சமயத்தில் ஆர்வம் இருந்தும் கூட படித்து பட்டம் பெற முடியாத நிலைமை. ஆனால் ஆஸ்டின் வந்து வாரிசுகளை ஆளாக்கி, மகள்ஸ்ரீ ஆர்யகுமார் பட்டம் பெற்ற சமயம் ஹேமாவும் முயன்று படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். அதன்பிறகு ஸ்ரீ ஆர்யகுமார் கொலம்பியா யூனிவர்சிட்டியில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.

மகன் பிரணவ குமார் மரின் இன்ஜினியரிங் படித்து அமெரிக்கா நேவியில் லெட்டினன்டாக பணிபுரிந்தவர். அதன் பின் தற்போது பென்சில்வேனியாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் படித்த வார்டன் பிசினஸ் கல்லூரியில் MBA படித்து வருகிறார். மகன் அதை முடித்து சாமின் நிறுவனங்களை கவனிக்க வருவார். மகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அதன் பின் அமெரிக்க - இந்தியா என தன் சேவையை தொடர வேண்டும் என்கிறார் சாம்.


புத்தகங்கள் வாசிப்பதும்,, பயணங்களும் இவரது பொழுதுபோக்குகள்.டென்னிஸ் டோர்னமெண்டிலும் இவர் விளையாடுகிறார். 19000 அடி உயரமுள்ள கிளிமஞ்சாரோ போய் வந்திருக்கிறார்.

இந்த வளர்ச்சியும் வெற்றியும் சாமிற்கு எப்படி சாத்தியமாயிற்று?


ஆத்மார்த்தத்துடன் பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அந்த உழைப்பை ஊழியர்களுக்கு நாமே முன்மாதிரியாக இருந்து செய்து காட்ட வேண்டும். எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பிலும் தலைமை - அல்லது தலைவர் சரியாய் - முறையாய் - முன்மாதிரியாய் இயங்கினால் ஊழியர்களும் அதன்படியே செயல்படுவர். எனது இந்த கொள்கை - கோட்பாடு சிறப்பாக கை கொடுத்திருக்கிறது. என பூரிக்கிறார் சாம்.

அத்துடன் மனைவி ஹேமாவின் சீரிய பங்கும் இவரது தொழில் மற்றும் சேவையிலும் இருக்கிறதாம்.ஹேமா தரும் சந்தோஷமான, மனப்பூர்வமான ஊக்கம் -உற்சாகத்தால் தான் சேவையை இவரால் செவ்வனே தொடர முடிகிறது என்கிறார். வாழ்க!


-என்.சி.மோகன்தாஸ்with R.தினேஷ்






      Dinamalar
      Follow us