/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா

ஆக 23, 2025

அபுதாபி : அபுதாபியில் உள்ள இந்திய இஸ்லாமிய மையத்தில் இன்று (ஆக-23) முதல் அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா தொடங்குகிறது.
இந்த விழாவில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக சென்னை, கோடம்பாக்கம் புலியூர் ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி. எஸ்.எம்.எஸ் முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூத்தீன் பங்கேற்று தீனிசைப் பாடல்களை பாட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது வருகிற செப்டம்பர் 3 ந் தேதி வரை தினந்தோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் தப்ரூக் உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
--- நமது செய்தியாளர், காஹிலா .
Advertisement