/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
/
துபாயில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
துபாயில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
துபாயில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
ஆக 25, 2025

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் வழிகாட்டுதலின் பேரில் கூட்டத்துக்கு துணைத் தலைவர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார் பள்ளப்பட்டி அபுசாலிஹ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் பக்ருதீன் அலி அஹமது கலந்து கொண்டார்.
கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பணிகளை விரிவுபடுத்துவது, கல்வி உதவித்தொகை வழங்குவது, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் மன்னர் மன்னர் நன்றி கூறினார். அப்துல் ரசாக், நவாசுதீன், முகம்மது அனீஷ், கட்டுமாவடி பைசல் ரஹ்மான், அப்துல் கனி, செய்யது அபுதாகிர் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement