/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் இந்திய முஸ்லிம் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
/
குவைத்தில் இந்திய முஸ்லிம் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
குவைத்தில் இந்திய முஸ்லிம் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
குவைத்தில் இந்திய முஸ்லிம் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்
ஏப் 21, 2024

குவைத் : குவைத் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் ஆதன் ரத்ததான மையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. குவைத் மத்திய ரத்த வங்கியின் வேண்டுகோளை தொடர்ந்து இந்த சிறப்பு ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குவைத் சமூக மறுமலர்ச்சி சங்கத்தின் மேலாளர் அப்துல் மொக்சின் அல் லகு இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மத்திய ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் அஸ்மா ராபத்தும் இந்திய முஸ்லிம் சங்கத்தின் தன்னார்வ பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த முகாம் சிறப்புடன் செயல்பட தேவையான ஒத்துழைப்பை வழங்கினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement