/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சர்வதேச தமிழ் பொறியாளர்களின் கத்தார் பிரிவு கூட்டம்
/
சர்வதேச தமிழ் பொறியாளர்களின் கத்தார் பிரிவு கூட்டம்
சர்வதேச தமிழ் பொறியாளர்களின் கத்தார் பிரிவு கூட்டம்
சர்வதேச தமிழ் பொறியாளர்களின் கத்தார் பிரிவு கூட்டம்
ஆக 26, 2025

தோகா: கத்தாரில் உள்ள சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம் (ITEF) நடத்திய தொழில்முனைவு மேம்பாட்டு மாநாடு மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தோகா இந்திய சமூக நல மன்றத்தில் அமைந்துள்ள காஞ்சனி உள்ளரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழக அரசு சார்பாக வந்திருந்த பிரதிநிதிகள் நிகழ்வில் இணைந்தது இந்த சந்திப்புக்கு பெரும் பொலிவையும், பலருக்கு பயனையும் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 2025, 12-13 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள ITEF அமைப்பின் தொழில்முறை மேம்பாட்டு மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்வுக்கான முன்னோட்டமாக இது பார்க்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தமிழக அரசின் பிரதிநிதிகளோடு தொழில்துறை அதிகாரிகள், ITEF சர்வதேச மற்றும் கத்தார் பிரிவின் தலைவர்கள், மேலும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் பொறியாளர்கள், தொழில் முனைவோர், சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதால் விழா களைகட்டியது.
சந்திப்பில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களின் விவரம்:
பி. கிருஷ்ணமூர்த்தி, பொது மேலாளர், ஆமர்டு வாகன நிகம் லிமிடெட் இந்தியா; டாக்டர். எல். ஷா நவாஸ் கான் - ஆலோசகர், தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம், தமிழ் நாடு; இ. செல்வம் சந்திரகாசு - ITEF சர்வதேச மேலாண்மை இயக்குனர் ஆகியோருடன் ITEF அமைப்பின் கத்தார் பிரிவின் தலைவரான இ. கார்த்திக் கடப்பா கலந்துகொண்டு இந்த சிந்தனை சங்கமத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களின் சுருக்கம் வருமாறு:
தொழில்நுட்பம், வணிகம் மற்றும் உலகளாவிய தமிழ்த் திறன்கள் குறித்த விளக்க அமர்வுகள் நடத்தப்பட்டது. புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி பாதைகள் பற்றிய விவாதமும், கலந்துரையாடலும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.
சில வாரங்களுக்கு முன்பாக கத்தாரின் இந்திய தூதர் திரு. விபுல் அவர்களுக்கு வழங்கப்பட்ட ITEF-கத்தார் 2024-2025 ஆண்டறிக்கையின் பிரதிகள் இந்த நிகழ்வின் போது வந்திருந்த தமிழக அரசு பிரதிநிதிகளுக்கும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. தொழில்முறை முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் மாநாடு பற்றிய முழுமையான முன்னோட்டம் மற்றும் அதிகாரப்பூர்வமான காணொலியும் வெளியிடப்பட்டது. அதில் நிகழ்ச்சி நிரல், மாநாட்டின் முக்கிய பயன்கள், தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் பிரதிநிதிகளின் பட்டியல் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
ITEF கத்தார் மற்றும் ISHRAE கத்தார் ஆகிய அமைப்புக்களிடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பொறியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், மேலும் CIWG (வெளிநாட்டில் உள்ள இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள்) பொறியியல் கல்லூரி இடஒதுக்கீடு மற்றும் இதர ஒதுக்கீடு சலுகைகள் குறித்த கோரிக்கை மனு வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடப்பதற்கு ஆதாரமாக இருந்த ஆதரவாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறு மாநாடு போல நடந்த இந்நிகழ்வு, கத்தாரில் வாழும் தமிழ் பொறியாளர்கள் மற்றும் தமிழக அரசின் இடையேயான தொழில்நுட்ப, தொழில் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய இணைப்பு பாலமாகவும், நல் முயற்சியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மற்றும் கத்தார் பொறியாளர்கள் அமைப்புகளின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை www.itefworld.com www.itefconference.com ஆகிய வலைத்தளங்கள் வாயிலாக அறிந்துகொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
--- நமது செய்தியாளர், எஸ். சிவசங்கர்.
Advertisement