sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே மனமே!

/

வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே மனமே!

வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே மனமே!

வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே மனமே!


ADDED : டிச 02, 2016 11:07 AM

Google News

ADDED : டிச 02, 2016 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.5 அரவிந்தர் நினைவுநாள்

* துன்பம் கண்டு யாரும் வருந்தத் தேவையில்லை. துன்பத்திற்கு பின் நன்மை வரப் போவது உறுதி. இதை அறிந்து நடந்தால் சிரமமில்லாமல் வாழலாம்.

* கடவுள் மகத்தானவர் என்பதால் தான் மனிதர்களின் புகழ் மொழிக்கும், ஏளனத்துக்கும் செவி சாய்க்காமல் எப்போதும் மவுனமாகவே இருக்கிறார்.

* ஆட்சி பீடத்தில் வீற்றிருக்கும் திறமையற்ற அரசனைக் காட்டிலும், திறமையும், நேர்மையும் மிக்க தொழிலாளியாக இருப்பது உயர்வானது.

* அறிவின் வடிவாகத் திகழும் கடவுள், பிரம்மாண்டமானவராக விளங்குகிறார். அவரது அருளால் தான் எல்லாமே நடக்கிறது.

* பகுத்தறிவுவாதி எதையும் பிரித்தறியவும், விபரங்களை வரையறுக்கவும் விரும்புகிறான். ஆனால் ஆன்மிகவாதி விஷயங்களை ஒன்றுபடுத்தி, மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகிறான்.

* கடவுளின் அன்பில் மனம் நெகிழ்ந்து உருகுங்கள். அவரது திருவிளையாடலைக் கண்டு உணர்ந்தவர்கள் வேறு எதையும் பெரிதாகக் கருதமாட்டார்கள்.

* நீங்கள் செய்வது மட்டுமே நியாயம் என்று வாதாடாதீர்கள். மற்றவர்களின் கருத்தையும் மதியுங்கள். அவர்களது செயல்களிலுள்ள நியாயத்தை உணருங்கள்.

* அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், விஞ்ஞானிகள் மனித ஆன்மாவைக் கண்டறியும் கருவியையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.

* கடவுள் மீதுமனிதன் கொண்டிருக்கும் மதிப்பீடு அர்த்தமற்றது. அவரது சக்தியைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இல்லை. மேலும் மனித விதிகளுக்கு அடங்கி நடக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.

* உங்கள் சிந்தனைகள் இமயத்தின் சிகரத்தை விட, உயர்ந்ததாக அமையட்டும். கடலையும் விட ஆழ்ந்து பார்க்கும் திறம் கொண்டதாகவும் விளங்கட்டும்.

* கடவுள் முன் மனிதன் அற்பப்புழு போன்றவன். தனது திறமை மீது நம்பிக்கை வைத்து மனிதன் அகந்தை கொள்வது முட்டாள்தனமானது.

* அன்பும், ஆற்றலும் இணைந்து விட்டால் உலகம் வளமாகி விடும். இவை இரண்டும் தனித்திருந்தால் எந்தச் செயலும் வெற்றி பெறாது.

* தீயவர்களிடமும் நல்ல குணம் இருக்கிறது. ஒழுக்கசீலர்களிடமும் கெட்ட குணம் இருக்கிறது. இது உலக இயற்கை. இதில் வியப்படையவோ, திகைக்கவோ ஏதுமில்லை.

* அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எல்லார் மீதும் இரக்கப்படுங்கள். நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தி மகிழுங்கள். ஆனால் பாசம் என்ற பெயரில் யாருக்கும் அடிமையாகி விடாதீர்கள்.

* ஒருவன் பனையளவு பாவம் செய்திருந்தாலும், சிறு தினையளவு நன்மை செய்திருந்தால், அவனைக் கடவுள் தன் அடியவரில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்.

* ஆத்திகம் என்பது கடவுளின் ஒரு பக்கத்தையும், நாத்திகம் அவரது மறுபக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இரண்டுமே மனித அறிவை முழுமை அடையச் செய்யும் விஷயங்கள் தான்.

* கடவுளின் கண்களில் அற்பமானது என்று எதுவுமில்லை. அதுபோல மனிதனின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது. எல்லாமே உலகில் உயர்ந்தவை தான்.

உற்சாகப்படுத்துகிறார் புதுச்சேரி மகான்






      Dinamalar
      Follow us