sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

கன்னி

/

கன்னி

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

குருப்பெயர்ச்சி பலன்கள் : கன்னி
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

கன்னிகுருபகவான் 4ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது அவ்வளவு சிறப்பானது எனச் சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து மாறுபடும். பொதுவாக குருபகவான் 4ல் இருக்கும் போது மனஉளைச்சல், உறவினர் வகையில் வீண் பகையை உருவாக்குவார்  ஆனால் அதைக் கண்டு கவலைப்பட வேண்டாம். மேலும்  குருபகவான் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிசாரம் பெற்று மகர ராசிக்குச் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மை அதிகரிக்கும். குரு 5ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5 மற்றும் 7ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக உள்ளது. இரவும், பகலும் போல நன்மையும், தீமையும் வாழ்வில் மாறி மாறி நடக்கும்.

குருவால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகை ஏற்படும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில்  பிரச்னை தலைதூக்கலாம். ஆனால் பொறுமையுடன் விட்டுக் கொடுத்தால் சிரமம் குறையும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சாதகமான பலன் ஏற்படும். உற்சாகமுடன் திட்டமிட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். உறவினர் உங்களை நாடி வருவர். புதிய வீடு,  வாகனம் வாங்க யோகமுண்டு. 2020 ஆக.31 முதல் மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். எதிரி தொல்லை தலைதூக்கும். விரிவாக்க நோக்கில் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். பெண்களால் பிரச்னை குறுக்கிடலாம். தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம். இருப்பினும் சனிபகவானின் சுப பார்வையால் கெடுபலன் குறையும். பகைவர் சதியை முறியடிக்கும் வலிமை உண்டாகும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பணப்புழக்கம் அதிகமாகும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுக்கவும். இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் பணிபுரியவும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள்  அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். தொழில் விஷயமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். வீண்அலைச்சல், மனவேதனை ஏற்படலாம். தொண்டர்கள் வகையில் அதிகமாக செலவழிக்க நேரிடும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  2020 ஆக.31 முதல் அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.  சிரத்தையுடன் படிப்பது நல்லது. சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை நற்பெயர் கிடைக்கும்.

விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்க  கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது.  2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வளர்ச்சியைக் காணலாம்.  நெல், மஞ்சள், கொண்டை கடலை, கேழ்வரகு, எள் போன்றவை மூலம் அதிக மகசூல் கிடைக்கும். 2020 ஆக.31க்குப் பின் சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.  2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.
 
குருவின் 5ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உண்டாகும். 2020 ஆக.31க்குப் பின் குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. உடல்நலனில் அக்கறை தேவை.  2020 ஆக.31 முதல் பிள்ளைகளின் நடவடிக்கையில் விழிப்புடன் இருக்கவும்.

பரிகாரம்:
*  சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
*  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
*  செவ்வாயன்று முருகப்பெருமான் வழிபாடு

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us