Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

துணிச்சலாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம்.  செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். செய்து வரும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடந்த மாதம் வரை இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவ செலவு குறையும். பெரியோரின் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 
மே 26 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனம் தெளிவு பெறும். மாணவர்கள் மேற்கல்விக்காக கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியமாக நடமாடக்கூடிய நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.
பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட சங்கடம் விலகும்.

திருவாதிரை
நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, யோகக்காரகனான ராகு மே 26 வரை குரு பார்வையுடன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வெளிநாட்டில் இருக்கும் சிலருக்கு பி.ஆர் கிடைக்கும். சிலருக்கு வேலையில் இருந்த பயம் போகும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். சகோதரர்கள் இடையே சிறு சிறு கசப்பு உண்டாகும். முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். சனி பகவானுக்கு மே 26 முதல் குரு பார்வை கிடைப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும். சில மாணவர்களுக்கு வெளியூரில் தங்கிப் படிக்கும் அளவிற்கு கல்லுாரியில் இடம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். பெண்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5.
அதிர்ஷ்ட நாள்: மே 22, 23, 31. ஜூன் 13, 14.

பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: தெளிந்த ஞானமும், பிறருக்கு வழிகாட்டக்கூடிய திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான குரு மே 26 வரை ராசிக்குள் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் பதவி உயர்வு ஏற்பட்டு குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழக்கூடிய நிலை உருவாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு சுவீட் எடு கொண்டாடு எனும் அளவிற்கு நல்ல செய்தி வரும். சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக்கூடிய அளவிற்கு நிலை உருவாகும். சொந்த இடம், வீடு என்று வாங்கவும், சிலருக்கு சொந்த வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் ஏற்படும். மே 26 முதல் குடும்ப ஸ்தானத்தில் உச்சமாகும் குரு குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குவார். பண வரவை அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அளவிற்கு செல்வாக்கை உயர்த்துவார். வெளி வட்டாரத்தில் மதிப்பை அதிகரிப்பார். நோய், நொடி, வம்பு, வழக்கு, பிரச்னை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கனவுகள் நனவாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பார்த்து வரும் வேலையில் பிரச்னை, தகுதிக் குறைவானவர்களால் அவமானம் என்றுள்ள நிலையெல்லாம் குரு பார்வையால் மாறும். உங்களை அவமானப் படுத்தியவர்களே உங்களைப் பாராட்டும் நிலை உருவாகும். செய்து வரும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 5, 6.
அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 12, 14.

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap