Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/ராகு கேது பெயர்ச்சி பலன்கள்/கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன் : கன்னி
15 ஜூலை 2017 to 03 பிப் 2019

முந்தைய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

கன்னிநல்லவர்களை மதிப்புடன் நடத்தும் கன்னி ராசி அன்பர்களே!

ராகு, கேது பெயர்ச்சியால்  ராஜயோக வாழ்வு அமையும்.  ராசிக்கு 12ம் இடமான சிம்மத்தில் இருந்து 11ம் இடமான கடகத்திற்கு செல்வது சிறப்பு. பொருளாதாரம் பன்மடங்கு உயரும். பெண்களால் நன்மை கிடைக்கும். கேது  6ம் இடமான கும்பத்தில் இருந்து 5ம் இடமான  மகரத்திற்கு வருவதால் அரசு வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். சனி பகவான் ராசிக்கு3ல் இருப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து 4ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் குடும்பத்தில் பகை, பிரிவு ஏற்படுத்துவார்.

குரு பகவான் தற்போது  ராசியில் இருப்பது சிறப்பு அல்ல என்றாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை உண்டாகும். ஆக.31க்குப் பின்  2ம் இடத்திற்கு செல்வதால் சுப பலன் அதிகரிக்கும். 2018 பிப். 13ல்  3ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை குறையும். கால வாரியாக விரிவான பலனை காணலாம்.2017 ஜூலை – டிசம்பர் கையில் பணப்புழக்கம் இருக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். ஆக. 31க்கு பிறகு குருபகவானால் நற்பலன் அதிகரிக்கும். பெண்களால் வாழ்வு மேன்மை பெறும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருள் குறைவின்றி கிடைக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு கட்ட யோகம் உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

தொழில், வியாபார வளர்ச்சியால் அமோக லாபம் கிடைக்கும்.  புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். விரிவாக்கப் பணியிலும் ஈடுபட வாய்ப்புண்டு.
பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமை இருந்தாலும்  அதற்கான பலன் கிடைக்கும்.  கலைஞர்கள்  சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு ஆக. 31க்கு பிறகு மறையும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வை பலத்தால்
போட்டியில் வெற்றி பெற வாய்ப்புண்டு. விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு உண்டாகும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். 2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகுவால் பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும்.
ஆடம்பர வசதி பெருகும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்களால் உதவி உண்டு. தடைபட்ட திருமணம் நடந்தேறும்.  சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவர். 2018 பிப். 13க்கு பிறகு முயற்சியில் தடை குறுக்கிடும். குரு பகவான் 2018 ஏப். 9 முதல் 2018 செப்.3 வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளியிடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் உதவி கிடைப்பது அரிது.  திருட்டு பயமும் ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின்ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  2018 பிப். 13க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.  கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்களிடத்தில் செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.மாணவர்களுக்கு தேக்கநிலை மறையும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.  விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  அதிக மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: வெள்ளி ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு வியாழன்று குருபகவானுக்கு அர்ச்சனை பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய்தீபம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap