sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

கும்பம்

/

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : கும்பம்
17 ஜூன் 2014 to 21 டிச 2015

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

கும்பம்நல்ல மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை ராகு 9-ம் இடமான துலாமில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகளின் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளையும், உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.
ராகுவுக்கு நேர் எதிரே பயணிக்கும் கிரகமான கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றியையும் தந்திருக்கலாம். பொருளாதார வளமும் அவரால் மேம்பட்டிருக்கும். இப்போது இடம்மாறி 2ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.  வாகன யோகம் ஏற்படும். வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.

தொழில், வியாபாரம்: முன்னேற்றத்துக்கான வழிவகையை தேட வேண்டும். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். நல்ல  வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அனுகூலமாக இருப்பர். வெளியூர் பயணம் சிறப்பை தரும். அச்சகம், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் நல்ல வளர்ச்சியடையும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில்
ஆரம்பிக்கலாம். ஆனால், மனைவி அல்லது வீட்டில் உள்ளவர்கள் பெயரில் தொழில் ஆரம்பிக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எது எப்படியானாலும் குருவின் பார்வை பலத்தால் அவை அனைத்தையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.

பணியாளர்கள்: வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சி செய்தால் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறலாம். விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கப்பெறலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தீவிர முயற்சியின் பேரில் வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு அலுவலகக் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள்: வாய்ப்பு பெற கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும். சிலர் வெளிநாடு சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருவர்.

அரசியல்வாதிகள்: பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டி வரும். வருமானமும் ஓரளவே. தலைமையின் அன்பைப் பெற வேண்டுமானால், அதிகமாகப் பேசாமல் இருப்பதே நல்லது.

மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிரத்தை எடுத்தால் விரும்பிய கல்லுõரிகளில் இடம் பெறலாம். சக மாணவர்களிடம், நட்பு கொள்ளும் போது நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

விவசாயிகள்: சிறப்பாக நடக்கும். நெல், கோதுமை, கொண்டை கடலை, கேழ்வரகு தானியங்கள் சிறப்பான மகசூல் தரும். வழக்கு விவகாரங்கள் சுபமான முடிவைத் தரும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: குடும்பத்தில் சிறப்பு பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வேண்டியிருக்கும்.

பரிகாரப் பாடல்!

வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க்கு அமுதீய போகும் காலை உன்தன் புணர்ப்பினால் சிரமேயற்று பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.

காளியின்அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு நீலம் மற்றும் பலவண்ண ஆடை தானம் கொடுங்கள். திருநாகேஸ்வரம் ராகு கோயிலுக்கு சென்று வாங்கள்.  கீழப்பெரும்பள்ளம் கேதுவுக்கு உங்கள் பெயரில் அர்ச்சனையும், பாலபிஷேகமும்  செ#வதன் மூலம்  எதிர்வரும் சிரமங்களை குறைக்கலாம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us