புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்
பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களையும், கை கடிகாரங்களையும் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக கருதுகிறவர்கள். அதேபோன்று விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறவர்கள். சல்மான்கான் ஒரு நாய் பண்ணையே வைத்திருக்கிறார்.
ஷாருக்கான் 4 விலை உயர்ந்த உயர்ஜாதி நாய்களை வளர்த்து வந்தார். இதில் ஒன்றை ஷாருக்கானின் மனைவி கவுரியின் தந்தை சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு நாயை அவருக்கு பரிசாக கொடுத்தார். அதன் மீது அதீத பாசம் வைத்திருந்தார் ஷாருக்கான்.
ஒரு நாள் அந்த நாய் நோயால் இறந்து விட்டது. அந்த நேரத்தில் ஷாருக்கான் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். திரும்பி வந்ததும் நாய் இறந்த தகவலை கூறியுள்ளனர். அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு தனது வீட்டு பணியாளர்களை அழைத்துக் கொண்டு நாய் புதைக்கப்பட்ட கடற்கரைக்கு சென்று புதைக்கப்பட்ட நாயை தோண்டி எடுத்து வந்து தனது வீட்டு தோட்டத்தில் புதைத்து அதற்கு சின்னதாக ஒரு கல்லறையும் கட்டினார்.
மறுநாள் நாயின் கல்லறையை பார்த்து ஷாருக்கான் அழுதார். எனது நாயை எப்படி தூக்கி எறிய உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? அவன் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் எங்களுடன் தான் இருக்க வேண்டும்” என்றார்.
தற்போது இந்த தகவலை பகிர்ந்துள்ள கவுரிகான், நாயுடன் ஷாருக்கான் இருக்கும் படத்தையும் பகிர்ந்து எங்களது 11 ஆண்டு கவலை இன்னும் தீரவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.