101 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர்
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'பெத்தி'. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான டிரைலர் 24 மணி நேரத்தில் மொத்தமாக 101 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மற்ற மொழிகளையும் சேர்த்து ஒரு தெலுங்குத் திரைப்படம் இவ்வளவு பார்வைகளைப் பெற்றது இதுவே முதல் முறை.
அதே சமயம் தெலுங்கு மொழியைப் பொறுத்தவரை 24 மணி நேரத்தில் 38 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாமிடத்தையே பிடித்தது. முதலிடத்தில் 47 மில்லியன் பார்வைகளுடன் 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர், இரண்டாமிடத்தில் 44 மில்லியன் பார்வைகளுடன் 'புஷ்பா 2' டிரைலர் உள்ளன.
'பெத்தி' டிரைலர் தொடர்ந்து சாதனை புரிவதற்குள்ளாகவே அதற்குப் போட்டியாக நேற்றிரவு ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' பட அறிமுக முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.