உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன்

படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். அவருக்கும் அவரது காதல் மனைவி ஆர்த்திக்குமான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் ரவி மோகனின் தோழியான கெனிஷா சென்னையை விட்டுச் சென்றார். மேலும், இனி ரவி மோகனின் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை என்றும் சொன்னார். அதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி மோகன் ஆவேசத்துடன் பேட்டி அளித்தார். மனைவி ஆர்த்தி குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அன்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய ரவி மோகன் அதில் கலந்து கொள்ளவில்லையாம். அவர் படப்பிடிப்புக்கு வருவாரா அல்லது படத்திலிருந்து விலகுவாரா என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கிறார். 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !